சென்னை அருகே துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. சிக்கியது எப்படி ?

சமீப நாட்களாக ரவிடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை அருகே பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. சென்னை அருகே செங்குன்றத்தில் 30 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவிடியான சேது என்கிற சேதுபதி பதுங்கி இருந்த இடம் குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

சென்னை அருகே துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. சிக்கியது எப்படி ?

ரவுடி சேது

Published: 

17 Jul 2024 19:10 PM

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: சென்னை புழலில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி (30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய A+ ரவுடி சேதுவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசார் ரகசிய தகவலின் பேரில் புழல் அருகே பதுங்கியிருந்த சேதுபதியை கைது செய்தனர். சேதுபதியுடன் பதுங்கி இருந்த பிரபு என்ற A category ரவுடியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தாண்டு சோழவரம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் எதிர் தரப்பாக செயல்பட்டவர் பிரபல ரவுடி சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப நாட்களாக ரவிடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை அருகே பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. சென்னை அருகே செங்குன்றத்தில் 30 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவிடியான சேது என்கிற சேதுபதி பதுங்கி இருந்த இடம் குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

Also Read: மகளிர் ஆசிய கோப்பை போட்டியை காண இலவச அனுமதி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

அதன்பேரில் இன்று போலீசார் சேது பதுங்கி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். அங்கு தனது கூட்டாளியுடன் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சேதுபதியை போலீசார் கைது செய்தனர். போலீசார் வந்ததை அறிந்த ரவுடி ஆயுதங்களை பயன்படுத்த முயற்சித்துள்ளார். அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் பிரபல ரவுடியை கைது செய்தனர். சேதுபதியிடம் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் சேதுபதியை வேன் மூலம் அழைத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சத்யா (வயது 45) கொலை குற்றவாளி. கடந்த 2005 இல் ரவுடி டெலிபோன் ரவி வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், தமிழ்நாடு முழுவதும் 6 கொலை வழக்குகள், என மொத்தம் 11 கொலை வழக்குகள் மற்றும் 4 கொலை முயற்சி உள்பட 32 வழக்குகளில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளி சீர்காழி சத்யா. மேலும் 2010 இல் அமைச்சர் கே.என் நேரு சகோதரர் திருச்சி ராம ஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனையில் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: மஞ்சள் மகிமை.. வீட்டு கிச்சனில் இருக்கும் சூப்பர் மருந்து.. இவ்வளவு விஷயம் இருக்கா?

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!