Chennai Train Cancelled: சென்னை மக்களே அலர்ட்.. இன்று மின்சார ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! - Tamil News | chennai suburban train from Chennai beach to egmore will not run tomorrow 28 july | TV9 Tamil

Chennai Train Cancelled: சென்னை மக்களே அலர்ட்.. இன்று மின்சார ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Updated On: 

28 Jul 2024 06:53 AM

சென்னை மின்சார ரயில்கள்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை - எழும்பூர் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை சென்னை கடற்கரை - எழும்பூர் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Train Cancelled: சென்னை மக்களே அலர்ட்.. இன்று மின்சார ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை ரயில்

Follow Us On

சென்னை மின்சார ரயில்கள்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை – எழும்பூர் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை சென்னை கடற்கரை – எழும்பூர் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில், இன்று சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் சேவைகைள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read: குட் நியூஸ் மாணவர்களே… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு தெரியுமா?

காலை 9.30 மணி முதுல் இரவு 10.40 வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில் தான் சென்னை கடற்கரை – எழும்பூர் வரை மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக  தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு இல்லாமல் செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி ரயில் காலை 10.00 மணிக்கும், காஞ்சிபுரம் – சென்னை மெரினா ரயில் காலை 9.30 மணிக்கும், திருமால்புரம் – சென்னை மெரினா ரயில் காலை 11.05 மணிக்கும், கூடுவாஞ்சேரி – தாம்பரம் ரயில் இரவு 20.55, 21.45, 22.25, 23.20 மணிகளில் நாளை ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்:


சென்னை மெரினா – பல்லாவரம் காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 22.40, 23.05, 23.59 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, மதியம் 12.00, 12.20, 12.40, 13.00, 13.20, 13.40, இரவு 23.30, 23.55 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு வரை காலை 10.45, 11.10, மதியம் 12.00, 12.50, 13.35, 13.55, இரவு 23.55 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் காலை 10.00, 10.30, 11.00, 11.45, மதியம் 12.30, 13.00, இரவு 23.00 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read: ”ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது?” மம்தாவுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version