Train Cancelled: ஊருக்கு போறீங்களா? இன்று முதல் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணிக்கோங்க மக்களே!
மின்சார ரயில்கள் ரத்து: சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இன்று முதல் பகல் நேரத்திலும் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து: சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இன்று முதல் பகல் நேரத்திலும் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே இரவு நேரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பகல் நேரத்திலும் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 தேதி வரை காலை 9.30 – 1.30 மணி வரை சென்னை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக. 3 – 14 இல் காலை 9.30 – பகல் 1.30 வரை சென்னை கடற்கரை – பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் மேற்சொன்ன நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் கூடுவாஞ்சேரி- செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கை ஏற்ற நீதிமன்றம்.. 7 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை ) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, 12, 12.15, 12.30, 12.45, 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: லைக்ஸ் மோகம்.. மனு கொடுக்க வந்த நபரை தீக்குளிக்க தூண்டிய யூடியூபர் கைது..
கூடுதல் பேருந்துகள் இயக்கம்:
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் நலன் கருதி இன்று முதல் 14ஆம் தேதி வரை தற்போது அவ்வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகளும் என மொத்தம் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.