Chennai Train Cancelled: சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எத்தனை நாளைக்கு? வெளியான முக்கிய அறிவிப்பு!
மின்சார ரயில்: சென்னையில் மின்சார ரயில் சேவை மாற்றம் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சார ரயில்: சென்னையில் மின்சார ரயில் சேவை மாற்றம் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பெரிய மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் ரயில் சேவை மாற்றம் நீடிக்கப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
ரயில் எண் (06028) விழுப்புரம் – தாம்பரம் ரயில், ரயில் எண் (06726) விழுப்புரம் – மேல்மருவத்தூர், ரயில் எண் (06722) மேல்மருவத்தூர – சென்னை கடற்கரை, ரயில் எண் (06026) புதுச்சேரி – சென்னை எழும்பூர், ரயில் எண் (06025) சென்னை எழும்பூர் – புதுச்சேரி, ரயில் எண் (06721) சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், ரயில் எண் (06725) மேல்மருவத்தூர் – விழுப்புரம், ரயில் எண் (06027) தாம்பரம் – விழுப்புரம் ரயில்கள் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயிலின் நேரம்:
#Chennai Division of #SouthernRailway announces additional changes in EMU/MEMU train services in Chennai Beach – #Tambaram – #Chengalpattu section with effect from 15th to 18th August 2024, due to the ongoing Remodelling works at Tambaram yard
Passengers, kindly take note pic.twitter.com/1BpAcJBN1d
— DRM Chennai (@DrmChennai) August 12, 2024
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரத்துடனும், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடனும் நிறுத்தப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, 12, 12.15, 12.30, 12.45, 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.