5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எருமை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்.. 500 மீட்டருக்கு தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பதற வைக்கும் காட்சிகள்!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எருமை மாடு எதிர்பாராத நேரத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக் கொண்ட பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு, அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு அந்த பெண்ணை இழுத்து சென்றது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்க முயற்சித்தபோது அவர்களை எருமை மாடு விரட்ட தொடங்கியது. மேலும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் மாடு சேதப்படுத்தியது. இறுதியாக அந்த பெண்ணை இரண்டு பேர் மாட்டின் பிடியில் இருந்து மீட்டனர். இதனால், அந்த பெண்ணுக்கு கை, கால்ரகள், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, இந்த பெண்ணை மீட்ட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

எருமை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்.. 500 மீட்டருக்கு தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பதற வைக்கும் காட்சிகள்!
சென்னையில் மாடு தாக்கி பெண் படுகாயம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Jun 2024 09:40 AM

எருமை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இருப்பினும், மாடுகளால் அவ்வப்போது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர் பகுதியில் தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எருமை மாடு எதிர்பாராத நேரத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக் கொண்ட பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு, அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு அந்த பெண்ணை இழுத்து சென்றது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்க முயற்சித்தபோது அவர்களை எருமை மாடு விரட்ட தொடங்கியது.

Also Read: கோவையை அலறவிட்ட சம்பவம்.. நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து கொள்ளை முயற்சி.. நடந்தது என்ன?

மேலும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் மாடு சேதப்படுத்தியது. இறுதியாக அந்த பெண்ணை இரண்டு பேர் மாட்டின் பிடியில் இருந்து மீட்டனர். இதனால், அந்த பெண்ணுக்கு கை, கால்ரகள், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, இந்த பெண்ணை மீட்ட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மதுமதி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க மதுமதி வீட்டிற்கு சென்றபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஏற்கனவே, சென்னையில் வளர்ப்பு நாயால் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், தற்போது, மாடு முட்டி இளம்பெண் ஒருவர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தாக்கிய எருமை மாட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கால்நடைகளை சாலையில் திரிய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது. இந்த ஆண்டு மட்டும் 1,117 மாடுகளை சென்னை மாநகராட்சி பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை மையம் தகவல்!

Latest News