5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bullet Train : பறக்கும் புல்லட் ரயில்.. சென்னை டூ மைசூரு வெறும் 90 நிமிடங்கள்.. வழித்தடங்கள் குறித்த தகவல்கள்!

Chennai To Mysuru Bullet Train: அதிவேக பயணத்திற்காகவும், சென்னை முதல் மைசூரு வரையிலான பயண நேரத்தை குறைக்கவும் இது உதவும். இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை முதல் மைசூரு வரையிலான பயண நேரம் என்பது 90 நிமிடங்களாக குறைக்கப்படும் என கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சென்னை, பூந்தமல்லி, சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா மற்றும் மைசூரு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Bullet Train : பறக்கும் புல்லட் ரயில்.. சென்னை டூ மைசூரு வெறும் 90 நிமிடங்கள்.. வழித்தடங்கள் குறித்த தகவல்கள்!
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Jul 2024 14:15 PM

சென்னை – மைசூரு புல்லட் ரயில்: சென்னை முதல் மைசூரு வரையிலான ரயில் பயணம் தற்போது வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் என கருதக்கூடிய புல்லட் ரயில் மூலம் இது சாதியமாகும். இந்த லட்சியத் திட்டம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 463 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படும். மேலும் இந்த ரயில் 11 நிறுத்தங்கள் கொண்டிருக்கும் குறிப்பாக பெங்களூருவில் மட்டும் 3 நிறுத்தங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 350 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட ரயில்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் இயக்க வேகம் மணிக்கு 320 கிமீ மற்றும் சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகம் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிவேக பயணத்திற்காகவும், சென்னை முதல் மைசூரு வரையிலான பயண நேரத்தை குறைக்கவும் இது உதவும்.

இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை முதல் மைசூரு வரையிலான பயண நேரம் என்பது 90 நிமிடங்களாக குறைக்கப்படும் என கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சென்னை, பூந்தமல்லி, சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா மற்றும் மைசூரு ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ”பாகிஸ்தான் தங்கள் தோல்வியில் இருந்து எதுவும் கற்கவில்லை” – கார்கில் போர் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி..

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தின் முடிவிற்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும், மைசூரு-பெங்களூரு-சென்னை வழித்தடமானது பிராந்திய வளர்ச்சி மற்றும் சுற்றுலாவிற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை உறுதியளிக்கிறது. இந்த வழித்தடமானது தரைநிலை, சுரங்கப்பாதை என கலவையாக அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 2.5 கிலோமீட்டர், சித்தூரில் 11.8 கிலோமீட்டர், பெங்களூரு கிராமத்தில் 2 கிலோமீட்டர் மற்றும் பெங்களூரு நகரில் 14 கிலோமீட்டர் என 30 கிலோமீட்டர் வரை சுரங்கப்பாதை வழித்தடம் கட்டமைக்கப்படும். திட்டத்தின் முதல் கட்டம் சென்னையில் இருந்து பெங்களூரு வரை 306 கிலோமீட்டர்களையும், இரண்டாம் கட்டம் பெங்களூரிலிருந்து மைசூரு வரை 157 கிலோமீட்டர்களையும் கொண்டதாக இருக்கும்.

மொத்த வழித்தடத்தில், 258 கிலோமீட்டர்கள் கர்நாடகாவிலும், 132 கிலோமீட்டர்கள் தமிழ்நாட்டிலும், மீதி ஆந்திரப் பிரதேசத்திலும் கட்டமைக்கப்படும். மைசூரு-பெங்களூரு-சென்னை அதிவேக புல்லட் ரயில் திட்டம் இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வரும். இது சம்பந்தப்பட்ட பகுதிகளில் விரைவான பயணம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பட்ட சுற்றுலா ஆகியவற்றை உறுதியளிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா..? அப்போ! எப்போது குடிக்க வேண்டும்..?

Latest News