Chennai Traffic: வாகன ஓட்டிகளே..சென்னையின் முக்கிய இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்று நிறைவடையும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் பலரும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், தலைவர்கள் நினைவிடம், வழிபாட்டு தலங்கள், கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை தேடி படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்று நிறைவடையும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் பலரும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், தலைவர்கள் நினைவிடம், வழிபாட்டு தலங்கள், கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை தேடி படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் அந்த நிகழ்ச்சி நடைபெறும் முக்கிய சாலைகளில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
எந்த ரூட்டில் போக்குவரத்து மாற்றம்?
சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் காரணமாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும். அவை வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, ஈவிஆர் சாலை வழியாக சம்பந்தப்பட்ட இடத்தை சென்றடையலாம்.அதேபோல் அண்ணா சாலையில் இருந்து வாலாஜா முனை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். மேலும் சிவானந்த சாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் காமராஜர் சாலையில் இருந்து சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லும். ஆனால் சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் சென்ற பின்பு அங்கு ஒருவழிப்பாதையாக இருந்த பெரியார் சிலை வரையிலான சாலை தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முத்துசாமி சந்திப்பில் இருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதற்குப் பதிலாக வாகன ஓட்டிகள் பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் ரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலைகளை தங்கள் சேர வேண்டிய இலக்கை அடைய பயன்படுத்தலாம்.
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளான வாலஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, பாரிஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களுக்கு மேலே குறிப்பிட்ட நேரங்களில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
இதேபோல் வேளச்சேரியில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆலந்தூர் மற்றும் GST சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்ஷைன் பள்ளி அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் “U” டர்ன் செய்து இரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
அதேபோல் விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புக்கு சென்று “U” டர்ன் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.