Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க.. உடனே பாருங்க! - Tamil News | chennai traffic diversion 3 days traffic changes in velachery road check the details | TV9 Tamil

Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க.. உடனே பாருங்க!

Updated On: 

10 Aug 2024 17:48 PM

போக்குவரத்து மாற்றம்: தலைநகர் சென்னையில் பொதுவாகனே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் வாகனங்கள் சாரை  சாரையாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடியும். சாதாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், வரும் 11, 18, 25ஆம் தேதிகளில் சென்னயில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்காக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க.. உடனே பாருங்க!

போக்குவரத்து மாற்றம்

Follow Us On

போக்குவரத்து மாற்றம்: தலைநகர் சென்னையில் பொதுவாகனே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் வாகனங்கள் சாரை  சாரையாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடியும். சாதாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரோ பணிகள், மேம்பாலம் கட்டுமானம் பணிகள், சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் சென்னையில் பல சாலைகளில் நடந்து வருகிறது. வரும் 11, 18, 25ஆம் தேதிகளில் சென்னயில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்காக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி என்பது வாரத்தில் இறுதியில் நடைபெறும். அதன்படி, சென்னையில் நாளை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி முக்கிய சாலையில் நடைபெற உள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Also Read: இனி இந்த ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

எந்த பகுதிகள்?

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிற்றுக்கிழமை தினங்களான 11.08.2024, 18.08.2024 மற்றும் 25.08.2024 ஆகிய நாட்களில் அதிகாலை 02.00 மணி முதல் 10.00 மணி வரை ” Happy Street” நிகழ்ச்சியினை நடத்த Times of India என்ற நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேற்படி “Happy Street” நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஆலந்தூர் மற்றும் GST சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் “U” திரும்பம் செய்து இரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.

Also Read: உஷார் மக்களே.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?

விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புல் “U” திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தனது பயணங்களை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version