Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியெல்லாம் முற்றிலும் தடை.. நோட் பண்ணிக்கோங்க! - Tamil News | | TV9 Tamil

Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியெல்லாம் முற்றிலும் தடை.. நோட் பண்ணிக்கோங்க!

Updated On: 

15 Jun 2024 21:51 PM

தலைநகர் சென்னையில் பொதுவாகனே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் வாகனங்கள் சாரை  சாரையாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடியும். சாதாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரோ பணிகள், மேம்பாலம் கட்டுமானம் பணிகள், சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் சென்னையில் பல சாலைகளில் நடந்து வருகிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது முக்கிய பகுதிகளில்  ஜூன் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chennai Traffic Diversion: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியெல்லாம் முற்றிலும் தடை.. நோட் பண்ணிக்கோங்க!

சென்னை போக்குவரத்து மாற்றம்

Follow Us On

போக்குவரத்து மாற்றம்: தலைநகர் சென்னையில் பொதுவாகனே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் வாகனங்கள் சாரை  சாரையாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடியும். சாதாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரோ பணிகள், மேம்பாலம் கட்டுமானம் பணிகள், சாலை விரிவாக்கம் என பல்வேறு பணிகள் சென்னையில் பல சாலைகளில் நடந்து வருகிறது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது முக்கிய பகுதிகளில்  ஜூன் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகள்?

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், கனரக வாகனங்கள் மற்றும் அனைத்த வகையான வாகனங்களும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டிமலெஸ் சாலை, புளியந்தோபபு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கு, குக்ஸ் சாலை, குன்னூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகள் வழியாக ஸ்டராகான்ஸ் சாலைக்கு வந்து செல்வதற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. ஸ்டரகான்ஸ் சாலைக்கு இருபுறமும் உள்ள உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்கு நியூ பெரன்ஸ் சாலை, செல்லப்பா தெரு ஆகிய சாலைகளை பயன்படுத்தி தங்கள் விரும்பும் இடங்களை அடையலாம்.

மாற்றுப்பாதை:

அயனாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டேரி பாலம்- குக்ஸ் மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்) டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் ரோடு பேசின் பாலம் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை U turn எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- பேசின் பாலம் அடைந்து மின்ட் செல்லலாம்.

மின்ட்லிருந்து வரும் வாகனங்கள் பேசின் பாலம் பேசின் பவர் ரோடு-
காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ்
சாலை- எஸ்டாரன்ஸ் சாலை சந்திப்பு டாக்டர் அம்பேத்கார் கல்லூரி
ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு-குக்ஸ் சாலை- ஓட்டேரி பாலம் அடைந்து அயனாவரம் செல்லலாம்.

பெரம்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை(தெற்கு)-
மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம்
பாலம்) டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் ரோடு பேசின் பாலம் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- U turn- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- பேசின் பாலம் அடைந்து மின்ட் செல்லலாம்.

Also Read: திமுக முப்பெரும் விழா.. ஒரே மேடையில் 40 எம்.பிக்கள்.. களைகட்டும் கோவை!

மின்ட் லிருந்து வரும் வாகனங்கள் – பேசின் பாலம் பேசின் பாலம்- பேசின் பவர் ரோடு காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ் சாலை- ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பு டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு-பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு) அடைந்து அயனாவரம் செல்லலாம்.

அயனாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டேரி பாலம் பிரிக்கிளின் சாலை- புரசைவாக்கம் நெடுஞ்சாலை அடைந்து டவுட்டன் செல்லலாம். டவுட்டனிலிருந்து வரும் வாகனங்கள்- புரசைவாக்கம் நெடுஞ்சாலை- வெள்ளால தெரு டாக்டர் அழகப்பா சாலை- மில்லர் ரோடு பிரிக்கிளின் ஓட்டேரி பாலம்-கொன்னர் நெடுஞ்சாலை அடைந்து அயனாவரம் செல்லலாம்.

சாலை- பெரம்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை- குக்ஸ் ஓட்டேரி பாலம்-பிரிக்கிளின் சாலை- புரசைவாக்கம் நெடுஞ்சாலை அடைந்து டவுட்டன் செல்லலாம்-

அயனாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டேரி பாலம் குக்ஸ் சாலை-மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- சூளை ரவுண்டானா சூளை நெடுஞ்சாலை- EVK சம்பத் சாலை- வேப்பேரி நெடுஞ்சாலை- ராஜா முத்தையா சாலை அடைந்து சென்டரல் செல்லலாம்.

சென்டால் லிருந்து வரும் வாகனங்கள் ராஜா முத்தையா சாலை- சூளை ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ் சாலை- ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பு டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை
ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு குக்ஸ் சாலை- ஓட்டேரி பாலம்-குன்னர் நெடுஞ்சாலை அடைந்து அயனாவரம் செல்லலாம்.

பெரம்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை- மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்) டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு
நெடுஞ்சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- சூளை ரவுண்டானா சூளை நெடுஞ்சாலை- EVK சம்பத் சாலை- வேப்பேரி நெடுஞ்சாலை- ராஜா முத்தையா சாலை அடைந்து சென்டரல் செல்லலாம்.

சென்டரல் லிருந்து வரும் வாகனங்கள் – ராஜா முத்தையா சாலை- சூளை ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ் சாலை-
ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பு- டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு-பெரம்பூர் நெடுஞ்சாலை அடைந்து அயனாவரம் செல்லலாம்.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை:

சென்டரல் லிருந்து வரும் கனரக வாகனங்கள் இரு வழிப்பாதையாக- ராஜா முத்தையா சாலை – சூளை ரவுண்டானா- பேசின் யானைக்கவுனி சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் சாலை- பேசின் பாலம்-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- வியாசர்பாடி மேம்பாலம்- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை-GNT சாலை- மூலக்கடை அடைந்து பெரம்பூர்’ மாதவரம் செல்லலாம்.

டபுட்னிலிருந்து வரும் கனரக வாகனங்கள் இருவழிப்பாதையாக அன்டர்ஸ் சாலை- தளை நெடுஞ்சாலை-சூளை ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் சாலை- பேசின் பாலம்-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- வியாசர்பாடி மேம்பாலம் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை-GNT சாலை- மூலக்கடை அடைந்து பெரம்பூர்’ மாதவரம் செல்லலாம்.

உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்கான மாற்றுப்பாதை:

உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்காக நியூபெரான்ஸ் சாலை, செல்லப்பா தெரு, அவதான பாப்பையா சாலை, சுப்பா சாலை, ரங்கையா சாலை, அஸ்டபுஜம் சாலை, வடமலை சாலை, தானா சாலை, முக்கு சாலை, மாணிக்கம் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தி தங்கள் விரும்பும் இடங்களை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிர்ச்சி கொடுத்த அதிமுக..இபிஎஸ் அதிரடி முடிவு!

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version