5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Traffic Diversion: சென்னையில் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட் தெரியுமா? செக் பண்ணுங்க!

சென்னை போக்குவரத்து மாற்றம்: திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியில் இருந்து திருப்பதிக்கு நாளை (அக்டோபர் 2) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. இதையடுத்து ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், காலை 10.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Chennai Traffic Diversion: சென்னையில் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட் தெரியுமா? செக் பண்ணுங்க!
சென்னை போக்குவரத்து மாற்றம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 01 Oct 2024 08:15 AM

திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியில் இருந்து திருப்பதிக்கு நாளை (அக்டோபர் 2) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. இதையடுத்து ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”பொதுமக்கள் கவனத்திற்கு, 02.10.2024 அன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் சுமார் (10000 பேர்) கலந்து கொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காலை 10.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம்:

காலை 08.00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, இராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

மாலை 03.00 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது இராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் இராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

Also Read: சென்னையில் இன்று மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் இராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது
மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது
நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

எந்தெந்த பகுதிகள்?

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

Also Read: மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த நபர் உயிரிழப்பு.. சென்னையில் மீண்டும் நடந்த சோகம்..

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்” என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட மாற்றங்களை அறிந்து கொண்டு வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News