Chennai Traffic Diversion: வீக் எண்ட் வெளியே போறீங்களா? சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த ரூட் தெரியுமா?

சென்னை போக்குவரத்து மாற்றம்: நாளை வேளச்சேரி சாலையில் ஹேப்ப ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக செல்லவும்.

Chennai Traffic Diversion: வீக் எண்ட் வெளியே போறீங்களா? சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த ரூட் தெரியுமா?

போக்குவரத்து மாற்றம்

Published: 

31 Aug 2024 17:46 PM

போக்குவரத்து மாற்றம்: சென்னை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. வேலை என ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பிரேக் எடுக்க முடியும். அப்போது மன அழுத்தத்தை போக்கும் விதமாக இவ்வாறாக ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு தங்களது மன அழுதத்தை போக்கி மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் சென்னை வாசிகளிடையே ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வாரந்தோறும் ஒவ்வொரு ஏரியாவில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நடக்கும் ஏரியாவில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை வேளச்சேரி சாலையில் ஹேப்ப ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  “J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை Happy Street ” ” நிகழ்ச்சியினை நடத்த Times of India என்ற நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். மேற்படி “Happy Street” நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

எந்தெந்த இடங்கள்?

ஆலந்தூர் மற்றும் GST சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் Sunshine School அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் “U” திரும்பம் செய்து இரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.

விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புல் “U” திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஃபார்முலா 4 பந்தயத்திற்காக தீவுத்திடல் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம். வுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். வானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம். பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நாளை மாலை வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?