”பைக் டாக்ஸி ஓட்டுவியா?” பட்டப்பகலில் இளைஞரை தாக்கிய கும்பல்.. சென்னையில் ஷாக்!
Chennai Crime News : சென்னை ஆலந்தூர் பகுதியில் பைக் டாக்ஸி ஓட்டுநரை 3 பேர் கொண்ட தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கத்திமுனையில் அவரது பைக்கையும் அந்த கும்பல் திருடிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் பைக் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பைக் டாக்ஸி ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தையும் 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு ஆட்டோர் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பைக் டாக்ஸி ஓட்டுநர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே பைக் டாக்ஸி ஓட்டுநர் முகுந்தன் (28) நின்றுக் கொண்டிருந்தார்.
பைக் டாக்ஸி ஓட்டுநர் தாக்கி கும்பல்
அப்போது அங்கிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பைக் டாக்ஸி ஓட்டுநர் முகுந்தனை சரமாரியாக தாக்கினர். அவர் வைத்திருந்த ஹெல்மெட்டால் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட முகுந்தன காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக் டாக்ஸி ஓட்டுநரை தாக்கிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்கள் சதீஷ்குமார் (34), ராஜகோபால் (26), பி சிவக்குமார் (34) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட பைக் மீட்கப்பட்டது. அவர்கள் 3 பேரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, பைக் டாக்சிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் பைக் டாக்சி ஓட்டுனர்களால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
பைக் டாக்சி ஓட்டுநரை பழிவாங்க கைதானவர்களில் ஒருவரான சதீஷ், மொபைல் போனில் பைக் டாக்ஸியை பதிவு செய்தார். சைதாப்பேட்டையில் சம்பவ இடத்துக்கு திருவாரூரைச் சேர்ந்த ஓட்டுநர் பி.முகுந்தன் (28) வந்தபோது, சதீஷ் மற்றும் அவரது கும்பல் முகுந்தனை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி அவரது பைக்கை எடுத்து சென்றுள்ளதாக போலீசார் கூறினர். பைக் டாக்ஸி ஓட்டுநரை தாக்கிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read : ஒரே குடும்பத்தை 3 பேர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி காரணம்!
சென்னையில் அதிர்ச்சி
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பைக் டாக்ஸிகள் இயங்கி வருகிறது. பைக் டாக்ஸி சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த கட்டணம் மற்றும் விரைவாக செல்ல முடியும் என்பதால் பலரும் பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது புகார்கள் எழுந்து வருகிறது.
பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுவதும் போன்ற புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பைக் டாக்ஸி சேவையைல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் பைக் டாக்ஸி சேவையை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read : கனமழை வெளுக்கப்போகுது… ஆரஞ்சு அலர்ட்.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் என்னென்ன?
இந்த சூழலில், சமீபத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதாவது, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும் வேண்டும் என்றும் பைக் டாக்ஸிகள் தனியார் வாகனங்களை பயன்படுத்துவது போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று தமிழக போக்குவரத்து துறை கூறியிருந்தது