Chennai Crime: சென்னையில் கொத்தடிமைகளாக இருந்த 4 பேர்.. கைது செய்யப்பட்ட பெண்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..
வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி வீட்டின் உரிமையாளர் ரஷீதா என்பவர் 1 சிறுமி உட்பட 3 பெண்களையும் கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இவர்களை வெளி மாநிலம் மற்றும் சென்னையிலுள்ள அவர்களது பெற்றோரிகளிடம் சிறிய தொகையை கொடுத்து மாதந்தோறும் சம்பளம் கொடுப்பதாக கூறி அழைத்து வந்துள்ளார்.
வளசரவாக்கம் பகுதியில் பெண்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதில் 1 சிறுமி உட்பட 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர், ராமாபுரம், மதுரவாயல் வட்டம், சென்னை என்பவர் 04.11.2024 அன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரில், வளசரவாக்கம் பகுதி திருப்பதி நகர் 2வது குறுக்கு தெருவிலுள்ள ஒரு வீட்டில் சிறுமி மற்றும் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தி கொடுமைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் கிடைத்த தகவலின் பேரில், அரசு துறையினர், குழந்தை மற்றும் கொத்தடிமை தடுப்புப்படை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை மற்றும் தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து, மேற்படி வீட்டில் சோதனை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வீட்டின் உரிமையாளர் ரஷீதா என்பவர் 1 சிறுமி உட்பட 3 பெண்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில், ரஷீதாவை கைது செய்து பெண்களை மீட்கும்படியும் அப்பகுதி மக்கள் தரப்பிலும் புகார் கொடுத்தவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொத்தடிமைகளாக இருந்த 4 பேர்:
வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி வீட்டின் உரிமையாளர் ரஷீதா என்பவர் 1 சிறுமி உட்பட 3 பெண்களையும் கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இவர்களை வெளி மாநிலம் மற்றும் சென்னையிலுள்ள அவர்களது பெற்றோரிகளிடம் சிறிய தொகையை கொடுத்து மாதந்தோறும் சம்பளம் கொடுப்பதாக கூறி அழைத்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – புதுச்சேரியில் 4 பேர் கைது!
அதாவது ரஷீதா வீட்டில் 1 சிறுமி உள்பட 4 பேர் கொத்தடிமைகளாக இருந்து வந்தது தெரியவந்தது. இதில் பூந்தமல்லியைச் சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கப்பட்டதும், அவர்கள் 6 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்ததி அம்பலமாகியுள்ளது.
இதே போல் 3 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கப்பட்ட திருப்பதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 3 ஆண்டுகளாகவும், 4 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட 20 வயது பெண் ஆகியோர் ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கப்பட்டதும், அவர்கள் 6 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து சில ஆண்டுகளாக, காலை முதல் நள்ளிரவு வரை வீட்டு வேலை, செல்ல பிராணிகளை பராமரிப்பது என தொடர்ந்து வேலைகளை வாங்கியது விசாரணையில் அம்பலமானது.
மேலும், வேலை செய்ய மறுத்தால் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதும், கரண்டியால் சூடு வைப்பதும், பூரி கட்டையால் அடிப்பதும் என கொடுமைப்படுத்தியதும், இதுவரையில் சம்பளம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க: “மாநாடு கூட்டிச் சென்றதற்கு பணம் தரவில்லை” – த.வெ.க. நிர்வாகி மீது வேன் ஓட்டுநர்கள் புகார்!
கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர்:
இதனை வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார், வழக்கில் தொடர்புடைய வளசரவாக்கம் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ரஷீதா( வயது 50) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரஷீதா விசாரணைக்குப் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
மேலும் அந்த விட்டில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, சென்னை செண்ட்ரல் ஆர்.டி.ஓ சதீஷ்குமார் மீட்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.