Chennai Crime: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் விபரீத முடிவு.. சென்னையில் பரபரப்பு!
Kathipara Suicide: சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான கிண்டி பகுதிகளில் இன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து இளைஞரின் தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர் தற்கொலை: சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான கிண்டி பகுதிகளில் இன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவராஜ். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சாமுவேல் ராஜ் (23) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சாமுவேல ராஜ் இரு சக்கர வாகனத்தில் வடபழனி செல்லும் சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கத்திபாரா மேம்பாலத்தில் போரூர் வழியாக செல்லும் வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மேம்பாலத்தின் மீது ஏறி கீழே குதித்துள்ளார்.
Also Read: 2 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சாமுவேல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து இளைஞரின் தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வாகாது. மன அழுத்தம், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதனை மனம் விட்டு பேசி சரிசெய்ய முடியும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
Also Read: விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக குத்திக்கொலை.. பெங்களூருவை அதிர வைத்த கிரைம்!