முன்னாள் காதலியை தாக்கிய இளைஞர்.. பிரேக் அப் சொன்னதால் ஆத்திரம்.. சென்னையில் அதிர்ச்சி!
Chennai Crime News : சென்னை வளசரவாக்கத்தில் முன்னாள் காதலியை இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் இளம்பெண்ணை தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முன்னாள் காதலியை இளைஞர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞருடனான உறவை முறித்து கொண்ட ஆத்திரத்தில் இளம்பெண்ணை அவர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் காதலியின் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் இளம்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் எம்பிஏ பட்டதாரியான இவர், கல்லூரியில் படிக்கும்போது மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் சில ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த பெண் சென்னை வளசராவாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
பிரேக் அப் சொன்னதால் ஆத்திரம்
இவர்கள் இரண்டு பேரும் கல்லூரி படிப்பை முடிந்த பிறகு காதலித்து வந்துள்ளனர். அதே நேரத்தில் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண், ஸ்ரீராம் உடனான உறவை முறித்துக் கொண்டார். இதனை அடுத்து, மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த பெண்ணிடம் வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் அந்த பெண் காதலிக்க மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இதுபற்றி பலமுறை ஸ்ரீராம், அந்த பெண்ணிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால், அந்த பெண் தொடர்ந்து மறுத்தே வந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம், வளசரவாக்கத்தில் இருக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் ஜன்னல் கண்ணாடியை நோக்கி கல் ஏரிந்துள்ளார். இதில் வீட்டிற்குள் இருந்த பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
Also Read : காலநிலை மாற்றத்தால் அழிகிறதா சென்னை? முதல்வர் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்
இதனால் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர். வளசரவாக்கம் போலீசார் ஸ்ரீராம் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும், அந்த காயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலை முறித்துக் கொண் ஆத்திரத்தில், இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று நடப்பது முதல்முறை. அண்மையில் கூட மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பணி செய்யும் இடத்திற்கே சென்று இளைஞர் ஒருவர், அவரை சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளார். அதாவது, இளம்பெண் சித்திக் ராஜா என்பவரை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார்.
Also Read : ”பைக் டாக்ஸி ஓட்டுவியா?” பட்டப்பகலில் இளைஞரை தாக்கிய கும்பல்.. சென்னையில் ஷாக்!
ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் சித்திராஜா தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். இந்த நிலையல், கடந்த 17ஆம் தேதி இளம்பெண் வேலை செய்யும் இடத்திற்கே சென்று அவர் சரமாரியாக தாக்கி உள்ளார். இதனை அடுத்து போலீசார் சித்திக்ராஜாவை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.