5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிதம்பரம் கோயில் கொடிமர விவகாரம்.. அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோயில் தான். பஞ்சபூத தளங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. பிரதோஷம், பௌர்ணமி, மகா சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

சிதம்பரம் கோயில் கொடிமர விவகாரம்.. அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2024 15:44 PM

சிதம்பரம் தில்லை நடராஜட் கோயிலில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் சேதமடைந்த பழைய கொடிமரத்தை அகற்ற சிதம்பரம் சார்பு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோயில் தான். பஞ்சபூத தளங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. பிரதோஷம், பௌர்ணமி, மகா சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் தீட்சிதர்களுக்கும் அரசுக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவது உண்டு. தீட்சிதர்கள் சொந்த கோயில் என்ற நினைவில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

கோயில் கொடிமர விவகாரம்:

ஆனால் இது தீட்சிதர்களுக்கான கோயில் இல்லை என்றும், பொது கோயில் என பல ஆண்டுகளுக்கு முன்னரே நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் அங்கே சர்ச்சைகள் தொடர்ந்து தான் வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடிமரத்தை அகற்றி விட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க:  23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்த திசையில் நகரும்? எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?

கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அறநிலையைத் துறை தரப்பில், பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும் கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கோயில் கொடி மரம் அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சிதம்பரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் நீதிமன்றத்தின் கவனத்துக்குப்கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பிரம்மோற்சவம் நடத்தப்படாது என்பதை மனுவாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க: பக்தர்களுக்கு திடீர் தடை.. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு!

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறநிலையத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கொடி மர விவகாரம் தொடர்பாக சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Latest News