MK Stalin: கொட்டித்தீர்த்த கனமழை.. விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

villupuram: புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தவித்துப் போயுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

MK Stalin: கொட்டித்தீர்த்த கனமழை.. விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Updated On: 

02 Dec 2024 10:49 AM

முதலமைச்சர் ஸ்டாலின்: ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காரைக்கால், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. ஃபெஞ்சல் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் கடலூர், விழுப்புரமும் வெள்ளத்தில் மிதக்கும் அளவுக்கு மழையின் அளவு இருந்தது. ஃபெஞ்சல் புயல் ஒருவழியாக மாமல்லபுரம் – புதுச்சேரி அருகே நவம்பர் 30 ஆம் தேதி இரவு 11 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Also Read: School Leave: தொடரும் கனமழை..10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

முதலமைச்சர் விழுப்புரம் பயணம்

புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தவித்துப் போயுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகள் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக மழைக்கும் நடுவில் நடைபெற்று வருகிறது. மேலும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்ட ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். காலை 10.30  மணிக்கு விழுப்புரம் வந்த அவர், அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விழுப்புரம், விக்கிரவாண்டி மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதோடு அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் சந்தித்து தேவையான நிவாரண பொருட்களை வழங்கவுள்ளார்.

ஏற்கனவே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டாட வைத்த புயல்

தென்கிழக்கு வங்க கடலில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது முதலில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென வடக்கு வடமேற்கு திசையில் இருந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் முதலில் புயல் உருவாகும் எனவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மாற்றம் காரணமாக பெண்கள் புயல் நவம்பர் 29ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் உருவானது. இந்தப் புயலானது இயற்கை குறுக்கீடுகள் காரணமாக மிக மெதுவாக நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்குவது தாமதமாகி கொண்டே சென்றது.

Also Read: Exclusive: மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்!

புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேசமயம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தேனி, மதுரையில் ஆகிய மாவட்டங்களில்  கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?
கலைக்கட்டும் கல்யாணம்... சோபிதாவின் போட்டோஸ் இதோ
விஜய்யா? ரஜினியா? யாருக்கு அதிக சம்பளம்?