புதிய ‘டைடல் பூங்கா’… 6 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி.. தமிழக அரசின் மெகா அறிவிப்பு

Tidal Park : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த புதிய டைடல் பூங்கா மூலம்  6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய டைடல் பூங்கா... 6 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி.. தமிழக அரசின் மெகா அறிவிப்பு

டைடல் பூங்கா

Updated On: 

22 Nov 2024 13:10 PM

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களை தொடங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் பட்டபிராமில் டைட்டல் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பட்டபிராமில் டைடல் பூங்கா

11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான நவீன தொலைத் தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள் போன்ற வசதிகள் உள்ளன.

மேலும், மின் தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் அங்கு உள்ளன.

Also Read : திடீரென ரஜினியை நேரில் சந்தித்த சீமான்.. பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்க சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி ருங்குழுமத்தால் முதல்கட்டமாக ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

6 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 14க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்பேட்டை சங்கத்தால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் பொது வசதிகளை அனைவரும் பயன் பெறலாம்.


குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்காக பலரும் காத்திருக்கும் சூழலில், திருவள்ளூர் டைடல் பூங்கா திறக்கப்பட்டது பலரும் பயன் உள்ளதாக  அமையும் என்று கூறப்படுகிறது. அதாவது,  இந்த புதிய டைடல் பூங்கா மூலம்  6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும், பசுமை கட்டடம் வழிமுறைகளின்படியும் இந்த டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவால் தமிழகத்தின் வடபகுதியைச் சேர்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read : 50 ஆண்டுகளாக மக்கள் சேவை.. ஆலங்குடி ‘515’ கணேசனின்‌ கதை!

மேலும், இந்த டைடல் பூங்காவால் தமிழகத்தின் வடபகுதி மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என்று கூறியுள்ளது. எனவே, டைடல் பூங்காவில் விரைவில் வேலைவாய்ப்பு குறித்த  அறிவிப்புகள்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான பிறகே எத்தனை பணியிடங்கள், சம்பளம், தகுதிகள் போன்ற தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!