Tirunelveli Crime: எதிர்வீட்டு குழந்தை கொலை.. வாஷிங்மெஷினில் அடைத்து வைத்த பெண்.. நடந்தது என்ன?

Child Murder: சஞ்சய் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்துள்ளான். இதனிடையே நேற்று காலை 9 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனான். இதனால் பதறிப்போன குடும்பத்தார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தப் பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடினர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

Tirunelveli Crime: எதிர்வீட்டு குழந்தை கொலை.. வாஷிங்மெஷினில் அடைத்து வைத்த பெண்.. நடந்தது என்ன?

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Sep 2024 21:22 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் எதிர்வீட்டுப் பெண்ணால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ராதாபுரம் பகுதியில் ஆத்துகுறிச்சி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் விக்னேஷ் என்ற கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் மூன்று வயது மகன் சஞ்சய் உடன் வசித்து வந்தார். சஞ்சய் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்துள்ளான். இதனிடையே நேற்று காலை 9 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனான். இதனால் பதறிப்போன குடும்பத்தார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தப் பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடினர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

ஒருவேளை தெரியாமல் சிறுவன் விழுந்து இருந்து ஏதாவது விபரீதம் நிகழ்ந்திருக்கலாம் என கருதிய மக்கள் நீர்நிலைகள் தொடக்கம் முதல் முடிவு வரை சென்று பார்த்துள்ளனர். ஆனால் சிறுவன் குறித்து எந்த வித தகவலும் தெரிய வராததால் உடனடியாக ராதாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என்ன நடந்தது என்பது பற்றி விசாரித்தனர். அப்போது விக்னேஷ் குடும்பத்திற்கும் அவரது எதிர் வீட்டில் வசித்து வந்த தங்கம் என்ற பெண்ணுக்கும் இடையே முன் விரோதம் இருப்பது குறித்த தகவல் கிடைத்தது.

Also Read: Vietnam Flood : வியட்நாம் வெள்ளம்.. பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு!

உடனடியாக போலீஸாரின் சந்தேகப்பார்வை தங்கத்தின் மீது திரும்பியது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோர் வீடுகளிலும் விசாரிப்பது போல தங்கத்தின் வீட்டிற்கும் சென்று விசாரித்துள்ளனர். அதேசமயம் வீட்டின் உள்ளே சிறுவன் இருக்கிறானா? என போலீசார் தேடிப் பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது தங்கம் சற்று முன்னுக்குப் பின் முரணாக பேசியது சந்தேகத்தை அதிகரித்தது.

இதனால் அவரால்தான் குழந்தைக்கு ஏதாவது நிகழ்ந்திருக்க கூடும் எனக் கருதிய போலீசார் விசாரணையை கடுமையாக்கினர். தான் சிக்கிக் கொண்டதை அறிந்த தங்கம் வேறு வழி இன்றி உண்மையை சொல்ல போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, தான் மூன்று வயது சிறுவன் சஞ்சயை கழுத்தை நெரித்துக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டியுள்ளேன்.  அதனை எனது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினுக்குள் மறைத்து வைத்திருக்கிறேன் என தங்கம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஒரு கணம் திகைத்துப் போன போலீசார் உடனடியாக வாஷிங்மெஷினை திறந்து பார்த்தபோது உறைந்து போயினர். அங்கு சஞ்சய் பிணமாக கிடந்த நிலையில் அவ்வளவு பெரிய சம்பவத்தை பண்ணி விட்டு எதுவும் நடக்காதது போல் தங்கம் கல்நெஞ்சம் படைத்தவராக அமைதியாக இருந்ததை கண்டு திகைத்துப்போயினர்.

Also Read: Farmer ID Card : ஆதார் கார்டை போலவே விவசாயிகளுக்கு அடையாள அட்டை.. வெளியான முக்கிய தகவல்!

இதனை தொடர்ந்து சிறுவன் சஞ்சய் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை உடற்கூறாய்வுக்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கத்தை கைது செய்து ராதாபுரத்திற்கு அருகில் உள்ள வேறொரு காவல் நிலையம் அழைத்துச் சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது 40 வயதான தங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகனை விபத்தில் ஒன்றில் பறிகொடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் எதிர் வீட்டில் விக்னேஷ் குடும்பத்தினர் தங்கள் குழந்தையிடம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்துள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் குடும்பத்திற்கும் தங்கும் குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில் இந்த ஆத்திரம் குழந்தை மீது திரும்பியுள்ளது.இதனால் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தக் கொடூர எண்ணத்தை செயல்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார்.

இதனிடையே நேற்று காலை தனியாக சாலையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது யாருக்கும் தெரியாமல் அவனை வீட்டுக்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் ராதாபுரம் சுற்றுவட்டார மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட இடத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். மேலும் சிறுவனை கொலை செய்து வீட்டின்  பின்புறம் தென்னை மரத்தின் அருகே புதைக்கும் முடிவில் தங்கம் குழிதோண்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் குழி தோண்டு பகுதி சற்று கடினமான பாறையாக இருந்ததால் அவரால் முழுமையாக குழியை தோண்ட முடியவில்லை. இதனால் தான் சிக்கி விடுவோம் என எண்ணி அவர் சாக்குப்பையில் சஞ்சய் உடலை கட்டி வாஷிங் மெஷின் மறைத்துள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை ஆத்துகுறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!