Tamilaga Vettri Kazhagam: த.வெ.க., மாநாடு.. இவர்களுக்கு அனுமதியில்லை.. விஜய் போட்ட உத்தரவு! - Tamil News | Children will not be allowed to participate in the thalapathy vijay's tamilaga vettri kazhagam conference | TV9 Tamil

Tamilaga Vettri Kazhagam: த.வெ.க., மாநாடு.. இவர்களுக்கு அனுமதியில்லை.. விஜய் போட்ட உத்தரவு!

Updated On: 

07 Sep 2024 08:10 AM

Thalapathy Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடந்த 28 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

Tamilaga Vettri Kazhagam: த.வெ.க., மாநாடு.. இவர்களுக்கு அனுமதியில்லை.. விஜய் போட்ட உத்தரவு!

கோப்பு புகைப்படம்

Follow Us On

தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடந்த 28 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இதனிடையே நேற்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு புஸ்ஸி என். ஆனந்த் வருகை தந்திருந்தார்.

Also Read: Madurai: புத்தகத்திருவிழாவில் சாமி பாட்டு.. அருள் வந்து ஆடிய பள்ளி மாணவிகள்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்துவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு நாங்கள் கடிதம் கொடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் அவர்கள் 21 கேள்விகளை முன்வைத்து பதிலளிக்க சொல்லி இருந்தார்கள். அதற்கு உண்டான பதிலை நாங்கள் கொடுத்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் மாநாடு தொடர்பான அனுமதி குறித்து உயர் அதிகாரியிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள். அதன் பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாநாடு நடைபெறும் தேதியை அறிவிப்பார்” என கூறினார்.

காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள மாநாட்டில் சுமார் 50,500 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 30 ஆயிரம் பேரும், பெண்கள் 20 ஆயிரம் பேரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாதுகாப்பு கருதி இந்த மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என சொல்லப்படுகிறது. செப்டம்பர் 23 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் முதல் மாநாடு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குழந்தைகள் நலனை கூட அவர் கருத்தில் கொண்டு செயல்படுவதாக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Also Read: Vinayagar Chaturthi: வீதிக்கு வீதி சிலைகள்.. களைகட்டிய விநாயகர் சதுர்த்தி பண்டிகை!

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். முன்னதாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இப்படியான நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு அரசியல் அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார். அந்த வகையில் விஜய் சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடி மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் தான் விஜயின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version