Crime: 9ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்.. பள்ளியில் நடந்த கொடூர சம்பவம்.. நெல்லையில் ஷாக்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 9ஆம் வகுப்பு மாணவர் தனது சாப்பாடு பையில் இருந்த தண்ணிர் பாட்டிலில இருந்து தண்ணீரை எடுத்து நாங்குநேரியைச் சேர்ந்த சக மாணவர் மீது சிந்தியதாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாக்கல் நடத்தப்பட்டுள்ளது.
மாணவனுக்கு அரிவாள் வெட்டு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்தியா கடற்படை வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாராப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வகுப்பில் சிறு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக நெல்லை மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் தனது சாப்பாடு பையில் இருந்த தண்ணிர் பாட்டிலில இருந்து தண்ணீரை எடுத்து நாங்குநேரியைச் சேர்ந்த சக மாணவர் மீது சிந்தியதாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Also Read: நடுங்கிய கோவை.. பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. பகீர் காரணம்!
தண்ணீர் சிந்தியதால் ஆத்திரம்:
இந்த நிலையில், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் நேற்று தனது வீட்டில் இருந்த சிறிய ரக அரிவாள் ஒன்றை பள்ளிக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு தன் மீது தண்ணீரை சிந்திய சக மாணவரை தலையில் வெட்டியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிகிறது. காயமடைந்த மாணவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நாங்குநேரியில் சின்னதுறை என்ற மாணவர் சாதிய வன்மம் காரணமாக சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டி சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
Also Read: கொடுமை… கழிவறையில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள்.. அங்கேயே உணவு சமைத்து சாப்பிடும் அவலம்!
மேலும், கடந்த 30ஆம் தேதி வள்ளியூரில் அரசு பள்ளியில் சாதிய மோதலில் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது. இரு சமூகங்களை சேர்ந்த அரசு மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 22 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படி தொடர்ந்து மாணவர்கள் இடையே பள்ளியில் கடும் மோதல் நடந்து வருவது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.