5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  ஜூலை 1ஆம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Oct 2024 16:40 PM

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53 சதவீதமா உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  ஜூலை 1ஆம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து இரண்டாவதாக ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும்.  பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை போலவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை டிஆர் உயர்த்தப்படும்.

Also Read: ”இந்தி மாத கொண்டாட்டம் எதற்கு?” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.  மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கையும் விடுத்தனர்.

இந்த சூழலில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி மூலம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு கால முறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பயன்படுவார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

3 சதவீதம் உயர்வு:

இந்த வகையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில்  முதலமைச்சர் அவர்கள், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

Also Read: சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Latest News