5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Virudhunagar: அபார வளர்ச்சியை நோக்கி விருதுநகர்.. முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் என்ன?

CM MK Stalin: விவசாயிகள் நலன் கருதி காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கும் கண்மாய்களையும், அணைக்கட்டுகளையும் ரூ.17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காரியாபட்டி வட்டத்தில் தெற்காற்றின் குறுக்கே புதிய அணை ஒன்று ரூ. 21 கோடி ரூபாய் செலவிலும், விருதுநகர் வட்டத்தில் இருக்கின்ற கௌசிகா ஆறு மற்றும் அருப்புக்கோட்டை வட்டத்தில் இருக்கிற கஞ்சம்பட்டி  கண்மாய் போன்ற நீர்நிலைகள் ரூ.41 கோடி செலவிலும் சீரமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Virudhunagar: அபார வளர்ச்சியை நோக்கி விருதுநகர்.. முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் என்ன?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 10 Nov 2024 16:39 PM

முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைகிறதா, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பணி நிலைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் கோவை மாவட்டத்திற்கு சென்ற அவர், தற்போது 2 நாட்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் சென்று பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் அளிக்கப்பட்டது.  இதனிடையே 2 ஆம் நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Also Read: Actor Delhi Ganesh: விமானப்படை வேலை வேண்டாம்… நடிப்புதான் வேணும் – டெல்லி கணேஷ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை

இன்று பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விருதுநகர் மாவட்டத்திற்கு சில திட்டங்கள் தேவை என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “விருதுநகர் மாவட்டம் தீப்பெட்டி, ஜவுளி உற்பத்தி, பட்டாசு மற்றும் அச்சு தொழில் போன்ற பல்வேறு தொழில் துறைகளில் முன்னணி மாவட்டமாக இருக்கிறது. ஆனாலும் விவசாயத்தைப் பொறுத்தவரை மழையையும், கண்மாய்கள்போன்ற நீர் நிலைகளையும் நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

ஆகவே விவசாயிகள் நலன் கருதி காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கும் கண்மாய்களையும், அணைக்கட்டுகளையும் ரூ.17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காரியாபட்டி வட்டத்தில் தெற்காற்றின் குறுக்கே புதிய அணை ஒன்று ரூ. 21 கோடி ரூபாய் செலவிலும், விருதுநகர் வட்டத்தில் இருக்கின்ற கௌசிகா ஆறு மற்றும் அருப்புக்கோட்டை வட்டத்தில் இருக்கிற கஞ்சம்பட்டி  கண்மாய் போன்ற நீர்நிலைகள் ரூ.41 கோடி செலவிலும் சீரமைக்கப்படும்.

அதேசமயம் வத்ராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் இருக்கும் 22 கண்மாய்கள் ரூ.18.10 கோடி செலவில் புரனமைக்கப்படும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். அதேபோல், “வெம்பகோட்டை, ஆனைகுட்டம், கலிங்கப்பேரி, கோல்வார்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அணைகள் ரூ.23.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும் எனவும், அந்த அணைப்பகுதிகளில் ரூ.2.74 கோடி  மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை முதல் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

புதிய சிப்காட் பூங்கா

தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் அமையும் புதிய சிப்காட் பூங்கா ரூ.350 கோடி செலவில் உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர்  அறிவித்துள்ளார். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 10,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் ரூ.15 கோடி  செலவில் சிவகாசி மாநகராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கமும், விருதுநகர் நகராட்சியில் ரூ.24.50 கோடி செலவில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து சாத்தூர் நகராட்சியில் ரூ.2 கோடி  மதிப்பீட்டில் பூங்கா மற்றும் சிறு பாலமும், ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடி செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படும்.

அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.3 செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், ஒன்றரை கோடி செலவில் புதிய பூங்காவும் ஏற்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

இதே போல் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பயன்பாட்டுக்காக கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடம் ரூ. 2.10 கோடி செலவில் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest News