CM MK Stalin: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின்  தனது சொந்த தொகுதியான சென்னையில் உள்ள கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள முதலமைச்சர் படைப்பகத்தை திறந்து வைத்தார். மாணவர்களுக்கான கல்வி மையம், வேலை செய்ய ஏதுவான இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள் என கூறினார்.

CM MK Stalin: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Nov 2024 17:13 PM

முதலமைச்சர் ஸ்டாலின்: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பதிலடி என இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின்  தனது சொந்த தொகுதியான சென்னையில் உள்ள கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள முதலமைச்சர் படைப்பகத்தை திறந்து வைத்தார். மாணவர்களுக்கான கல்வி மையம், வேலை செய்ய ஏதுவான இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அறிஞர் அண்ணா வானியல் அவர்களே பார்த்து வாழ்க வசவாளர்கள் என சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Also Read: கனடா இந்து கோயில் மீது தாக்குதல்.. காலிஸ்தானியர்களுக்கு வலுக்கும் கண்டனம்.. நடந்தது என்ன?

முதலமைச்சரின் இந்த கருத்து விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பது போல இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் பேச்சு மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது.

Also Read: Tamilnadu Weather Alert: அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. சென்னையில் எப்படி?

திமுகவை பெயர் குறிப்பிடாமல் திராவிட மாடல் அரசு என சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக எதிர்க்கட்சி என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுகவின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலரும் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர். இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் ஒருநாள் முடிவுக்கு வரும்

தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு எதிராக அனிதா தற்கொலை செய்துக்கொண்டபோது நாம் எல்லோரும் தாங்க முடியாத வேதனைக்கு உள்ளானோம். நீட் தேர்வு அவரின் கனவை சிதைத்து விட்டது. உயிரை பறித்து விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒன்றிய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது. அது நடந்து தான் தீரும். அதில் நிச்சயம் மாற்றுக் கருத்தில்லை. நீட் விலக்கு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது என கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களை அனைத்து நிலைகளிலும் தகுதி உடையவர்களாக மாற்றுவது தான் திராவிடம் ஆடல் அரசின் லட்சியமாக உள்ளது எனவும், நமது ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறைகூறுபவர்கள் நம் திட்டங்களை பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், திமுக தொண்டர்கள்,நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறாமல் இருக்க காரணம்!
உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!
மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?