CM Stalin: தொடரும் கள ஆய்வு.. அரியலூர், பெரம்பலூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!

TN Government: முதலாவதாக காலை 9:30 மணிக்கு ஜெயம் கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டை பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 13 ஏக்கரில், ரூ.1000 கோடி முதலீட்டில், 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் காலனி உற்பத்தி தொழிற்சாலை அங்கு அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

CM Stalin: தொடரும் கள ஆய்வு.. அரியலூர், பெரம்பலூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கோப்பு புகைப்படம்

Published: 

15 Nov 2024 07:20 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இப்படியான நிலையில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைகிறதா?, மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்ட பணிகளின் நிலை என்ன? என்பது பற்றி அறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் இருந்து தனது கள ஆய்வை  முதலமைச்சர் தொடங்கினார்.  2வதாக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். இப்படியான நிலையில் இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு!

உற்சாக வரவேற்பளித்த திமுகவினர்

இதனை முன்னிட்டு நேற்று இரவு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், பின் சாலை வழியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டதிற்கு சென்றார். அங்கு அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருக்கும் பயணியர் விடுதியில் தங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

முதலாவதாக காலை 9:30 மணிக்கு ஜெயம் கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டை பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 13 ஏக்கரில், ரூ.1000 கோடி முதலீட்டில், 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் காலனி உற்பத்தி தொழிற்சாலை அங்கு அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 10:30 மணி அளவில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கான பணிகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி அவர்களை சராசரி ஊட்டச்சத்து  உடையவர்களாக உருவாக்கி தமிழ்நாட்டினை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்க பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

Also Read: காற்றில் பரவிய விஷம்.. 2 குழந்தைகளின் உயிரை பறித்த எலி மருந்து.. சென்னையில் ஷாக்!

அரியலூரில் திட்ட பணிகள் தொடக்கம்

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கி சிறப்பிக்கிறார்.  இதனை தொடர்ந்து காலை 11.15 மணிக்கு அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு அரியலூர் மாவட்டத்துக்கான 26 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 51 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறைகளில் சார்பில் 10.141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

பின்னர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 27 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், 456 முடிவற்ற திட்ட பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அங்கு 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு பின்னர் அங்கு சற்று நேரம் ஓய்வெடுக்க உள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதன் பின்னர் மாலை 4:30 மணியளவில் பெரம்பலூர் 4 ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கவுள்ளார்.  இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து 7.55 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?