CM Stalin: சைக்கிள் ஓட்ட கூப்பிட்ட ராகுல்காந்தி.. பழசை மறக்காமல் ஸ்டாலின் சொன்ன பதில்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக அவர் தற்போது சிகாகோவில் தற்போது உள்ளார். இதனிடையே மாலை நேரத்தில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவை இன்று அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதனை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக அவர் தற்போது சிகாகோவில் தற்போது உள்ளார். இதனிடையே மாலை நேரத்தில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவை இன்று அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதனை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.இந்த வீடியோவை இன்று காலை பகிர்ந்த முதலமைச்சர், “இந்த மாலை நேரத்தின் அமைதி புதிய கனவுகளுக்கான களத்தை அமைக்கிறது” என தெரிவித்திருந்தார்.
Also Read: Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு.. மறக்காமல் இதை ஃபாலோ பண்ணுங்க!
Dear brother @RahulGandhi, whenever you’re free, let’s ride and explore the heart of Chennai together! 🚴
A box of sweets is still pending from my side. After our cycling, let’s enjoy a delicious South Indian lunch with sweets at my home. https://t.co/X0Ihre6xpo
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
இந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி, “சகோதரரே, நாம் இருவரும் எப்போது சென்னையில் ஒன்றாக சைக்கிள் ஓட்டப்போகிறோம்?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “எனது அன்பான ராகுல் காந்தி சகோதரரே.. நீங்கள் எப்போது ஃப்ரீயாக இருக்கிறீர்கள் என சொல்லுங்கள். நாம் இருவரும் ஒன்றாக பயணம் செய்து சென்னையின் மனதை பற்றி அறிவோம். அதே சமயம் நான் உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்று பாக்கி உள்ளது. சைக்கிள் ஓட்டிய பிறகு என்னுடைய வீட்டில் இனிப்புகளுடன் கூடிய ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை அனுபவியுங்கள்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Also Read: South Korea: அதிகாரிகள் அலட்சியம்.. 1000 பேர் உயிரிழப்பு.. 30 பேரை தூக்கில் ஏற்றிய கிம் ஜோங் உன்!
முதலமைச்சர் அமெரிக்கா பயணம்
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” தெற்கு ஆசியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்த இடமாக இருக்கும். மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் தான் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.