5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin: 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான்.. முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை!

DMK: இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் முதலில் அங்குள்ள விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

CM Stalin: 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான்.. முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை!
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 06 Nov 2024 06:37 AM

முதலமைச்சர் ஸ்டாலின்: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டன. அந்த வகையில் திமுகவும் களப்பணியை தொடங்கி விட்டது. இதற்கான தனியாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களுக்கான நலத்திட்ட பணிகள் அவர்களை சரியாக சென்றடைகிறதா, தொடர்ச்சியாக நடந்து வரும் நலத்திட்ட பணிகள் என்னென்ன என்பது தொடர்பாக கள ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதற்கான பயணத்தை கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கியுள்ளார். இதற்கான சென்னையில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவை சென்ற அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: Pawan Kalyan: கூட்டணியில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவுடன் மோதும் பவன் கல்யாண்? பின்னணியில் பாஜக!

திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் முதலில் அங்குள்ள விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து கெம்பட்டி காலனியில்  தர்மராஜா கோயில் தெருவில் உள்ள தங்க நகை தயாரிப்பு பட்டறைக்கு சென்ற அவர் அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதனை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான விடுதிகளை ஆய்வு செய்தார். இதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  “ஒவ்வொரு நிர்வாகிகளும் அவரவர் குடும்பத்திற்கான நேரத்தை சரியாக செலவிட வேண்டும். தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தை மட்டும் கட்சிக்காக ஒதுக்குங்கள். அதேபோல் வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கழகப் பணிகளுக்கு என ஒதுக்குங்கள்” எனவும் அறிவுறுத்தினார். மேலும், “எந்த எதிர்பார்ப்பும் இன்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீண்டும் திமுக ஆட்சி தான்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர போகிறோம் என்பதை கோயம்புத்தூர் மக்கள் அளித்த வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன்” என கூறியுள்ளார். கோவையில் வசித்து வரும் மக்கள் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அவற்றை நிறைவேற்றி தர உறுதியளித்துள்ளேன். கோவையில் விரைவில் தங்க நகை தொழில் பூங்கா அமைப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பரிசீலனை நடைபெற்று வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

முன்னதாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கோவை மக்களின் அன்பு என்ன நெகிழ வைத்தது. கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தது. 4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது” என பதிவிட்டிருந்தார். இரண்டாம் நாளான இன்றும் அம்மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்து, பணிகளை ஆய்வு செய்தும், அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.

Latest News