5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MK Stalin: கனமழை, வெள்ளம்.. எது வந்தாலும் சமாளிக்க தயார்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  நீர்நிலைகள் நிரம்பி நீர் ஊருக்குள் புகுந்துள்ள நிலையில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால்  பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

MK Stalin: கனமழை, வெள்ளம்.. எது வந்தாலும் சமாளிக்க தயார்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Dec 2024 12:27 PM

முதலமைச்சர் ஸ்டாலின்: கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகள் அதிகப்படியாக ஏற்பட்டால் அதனை சமாளிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்த நிலையில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. சில இடங்களில் குளங்கள் உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.

Also Read: Tirunelveli: வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி.. களத்தில் இறங்கிய மாநகராட்சி!

எதையும் எதிர்கொள்ள தயார்

அப்போது தமிழகத்தில் பெய்த மழை நிலவரம், வெள்ள பாதிப்புகள், அணைகளில் நீர் திறப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஏற்கனவே கடந்த 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்களோடு ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினோம். மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இங்கிருந்து மூத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் வரவில்லை. அப்படியே ஏதேனும் நிகழ்ந்தால் அதையும் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது” என கூறினார்.

மேலும் தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனையும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவையும் அனுப்பி வைத்தோம். இதில் திருச்சி மாவட்டத்தில் மழை பெய்ததால் கே.என்.நேரு உடனடியாக அங்கு வந்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் அவரை திருநெல்வேலிக்கு போக சொல்லி அறிவுறுத்தி உள்ளோம்” என முதலமைச்சர் கூறினார்.

மேலும் அணைகள் மற்றும் ஏரிகள் திறப்பு குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எங்களால் முடிந்த வரை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம் எனவும் கூறினார்.

Also Read: School Leave: தொடர் கனமழை.. இன்றும் 24 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

கொட்டி தீர்க்கும் கனமழை – வெள்ளம்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  நீர்நிலைகள் நிரம்பி நீர் ஊருக்குள் புகுந்துள்ள நிலையில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால்  பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சில இடங்களில் குளங்கள் உடையும் நிலை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நீர் இருப்புகளை கண்காணித்து வருகிறது.

சாலைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் அனைத்து அறிவுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் அறிவிக்கரையோரம் சென்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்க கூடாது. முடிந்தவரை வீட்டில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்றவும், கால்வாய்களில் அமலை செடிகளால் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி தண்ணீர் சீராக செல்லவும் உடனடியாக திருநெல்வேலி மாநகராட்சி தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகம் வெள்ள பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளையும், மீட்பு பணிகள் குறித்து விவரங்களையும் உடனுக்குடன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு மக்களின் அச்சத்தை போக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு: Breaking News in Tamil Live: பல்வேறு அணைகளில் நீர் திறப்பு.. இன்றைய செய்திகள் உடனுக்குடன்!

Latest News