CM MK Stalin: எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

DMK Meeting: சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளும் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடியுங்கள்" எனவும் அறிவுறுத்தினார்.

CM MK Stalin: எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

28 Oct 2024 15:41 PM

திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக மக்களவை தேர்தல் முடிந்ததும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்வது குறித்தும் தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்தும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது. மேலும் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்குவது குறித்தும், அதன் தலைமைகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Also Read: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வு முடிவுகள் வெளியானது.. இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்வது எப்படி?

இந்த நிலையில் தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ளும் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடியுங்கள்” எனவும் அறிவுறுத்தினார். மேலும்,  “எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” எனவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய அவர், “தேர்தலுக்கு கடுமையாக பார்வை பணியாற்ற வேண்டும்” என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பதிலடி என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழக அரசியல் களத்தை  தேசிய ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தும்  வாயிலாக மிகப்பெரிய மாற்றத்தை இந்த மாநாடு மாற்றி காட்டியுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவரான விஜய், அரசியல் ரீதியாக பெயர் குறிப்பிடாமல் திமுகவை தனது எதிரி என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் பெருகி உள்ளது.

Also Read: Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

பலரும் திமுகவுக்கு மாற்றாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் என கணித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு,  “திமுக கூடி கலைகின்ற மேக கூட்டம் கிடையாது. அது கொள்கை சார்ந்த கூட்டம். எனவே எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய் ஏற்பாடு செய்திருப்பார்களோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி தெரிவிக்கையில்,  “தமிழக வெற்றி கழகம் பாஜகவின் ஏ டீம், பி டீம் அல்ல. அது சி டீம். அதிமுக தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதே விஜய்யின் குறிக்கோள். எனவேதான் அதிமுகவைப் பற்றி மாநாட்டில் விஜய் பேசவில்லை” என தெரிவித்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவிக்கையில், “காய்த்தமரம் தான் கல்லடிப்படும். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் எதிர்பார்கள். விமர்சனங்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?