சிகாகோவில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
சிகாகோவில் இன்று முதலீட்டாள்ர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்ப்யு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் ரூபாய் 200 கோடியில் R&D மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்திற்காக ஈட்டனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 500 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றடைந்தார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடத்திய நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி, – சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதிசிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நடைபெறுகிறது.
View this post on Instagram
சிகாகோவில் இன்று முதலீட்டாள்ர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்ப்யு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் ரூபாய் 200 கோடியில் R&D மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்திற்காக ஈட்டனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 500 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அஷ்யூரன்ட்டின் முதல் உலகளாவிய திறன் மையம், விரைவில் சென்னைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் சிகாகோவில் சைக்கிள் ஒட்டிச் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. இது தொடர்பான பதிவில், “ அமைதியான இந்த மாலை பொழுதில், புதிய கனவுகளுக்கு களம் அமைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சூப்பர் அறிவிப்பு.. நெய்வேலி – சென்னை இடையே ஏர் டேக்ஸி சேவை.. எப்போது ?
இதற்கு முன்னதாக, இன்று அமெரிக்காவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், ” தெற்கு ஆசியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்த இடமாக இருக்கும். மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் தான் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Another fruitful day in Chicago!
Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai. pic.twitter.com/tnZ4yOO8uF
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்க வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.