CM Stalin Visit to Amstrong House: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்..!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரின் திருஉருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலை வழக்கில் பழிக்குப் பழி வாங்கவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியானது.
TN CM MK Stalin visited the residence of K Armstrong, BSP State president who was hacked to death . After paying homage floral tributes to the portrait of Armstrong, the CM consoled Porkodi, wife of Armstrong and the family members of Armstrong. pic.twitter.com/FGoYf1aNcg
— KS / Karthigaichelvan S (@karthickselvaa) July 9, 2024
இந்த சம்பவத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை பெரம்பூரில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொத்தேரியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில், அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்த இரங்கல் தெரிவித்தார். அதன்பின், மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் திருஉருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Also Read: மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!