வடகிழக்கு பருவமழை.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளும் அங்கிருக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் ஆலோசனை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளும் அங்கிருக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அக்டோபர் 14 முதல் 17 ஆம் தேதி வரை படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 16 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
Also Read: Rain Alert: சென்னையில் கொட்ட தொடங்கிய மழை.. மக்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று முதல் மழையின் அளவு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தாலும் எந்த சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Update 4 – Decent rains reported in Chennai as massive ball of cloud forms over North Tamil Nadu. Remember today is just a start and break will be there in the day time. Nights to early mornings are always the peak times (except when depression comes close to us that time… pic.twitter.com/nob4dRw1P8
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2024
அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைப்பு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க ஆசையா..? இவற்றை தவறாமல் பின்பற்றுங்கள்..!
ஏமாற்றமடைந்த மாணவர்கள்
சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நள்ளிரவு முதல் காலை வரை கனமழை பெய்த நிலையில் கல்வி நிறுவனங்கள் விடுமுறை விடப்படுமா என எதிர்பார்த்து காத்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதனிடையே வானிலை பற்றிய முன்னறிவிப்பு, நிகழ்வு நேர தகவல் மற்றும் கள நிலவரத்தை அறிய வாட்ஸ் அப் குழுவில் சேருமாறு சென்னை காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்து அழைப்பு விடுத்துள்ளார். அதில் 99947 – 9008 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 180 இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னே எச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் 25 இடங்களில் மழைநீர் தேங்கும் என கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மழைநீர் வடிவால் இணைப்பு பணிகள் முழுமை பெறாமல் உள்ள 43 இடங்களில் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கனரக மோட்டார்கள் பொருத்தப்பட்ட 57 டாக்டர்கள் சென்னை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தேவைக்கேற்ப இந்த டாக்டர்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.