5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin: இன்று முதல் மாவட்ட வாரியாக ஆய்வு.. களத்தில் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான அரசு மகளிர் இலவச பயணம், மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, நான் முதல்வன் உள்ளிட்ட பலதுறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கான முன்களப்பணிகள் தொடங்கியுள்ளது. 

CM Stalin: இன்று முதல் மாவட்ட வாரியாக ஆய்வு.. களத்தில் இறங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Nov 2024 06:29 AM

முதலமைச்சர் ஸ்டாலின்:  தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான பணிகள் அனைத்தும் முறையாக மக்களை சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.  தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றார். அவர் தலைமையிலான அரசு மகளிர் இலவச பயணம், மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, நான் முதல்வன் உள்ளிட்ட பலதுறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்கான முன்களப்பணிகள் தொடங்கியுள்ளது.

அதன் விளைவாக ஒவ்வொரு மாவட்டந்தோறும் அவர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன்படி தனது கள ஆய்வை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 5) கோவையில் இருந்து தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வுப் பணிக்காக கோவை வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும், நாளையும் அம்மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு கட்சி மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு கோவையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Also Read: CM MK Stalin: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்நிகழ்விற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் கோவை வருகிறார். அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து எல்காட் நிறுவனம் சார்பில் விளாங்குறிச்சியில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை அவர் திறந்து வைக்கிறார். ரூ.114.16 கோடி செலவில் 3.94 ஏக்கரில் 8 தளங்களுடன் இந்த தொழில்நுட்ப பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: இன்ஸ்டாகிராம் சிக்கலை கண்டுபிடித்த கோவை மாணவர்.. மெட்டா நிறுவனம் கொடுத்த வெகுமதி!

இதன்பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்ட  நில எடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களுக்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்குகிறார். இது முதலமைச்சர் கள ஆய்வின் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இதன்பின்னர் போத்தனூரில் உள்ள பிவிஜி திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சட்டமன்ற தேர்தலில் திமுக முன்னெடுக்க உள்ள பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கவுள்ளார்.

இன்று இரவு கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தங்குகிறார். அவரது வருகையை முன்னிட்டு சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Latest News