5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin | தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில், திமுக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக தலைமையிலான இந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!
உதயநிதி ஸ்டாலின்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 18 Sep 2024 16:29 PM

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதிஸ்டாலின் இன்று அறிவிக்கபடுவார் என்றும் அவர் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் அரிவாலையத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்த திமுக

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில், திமுக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக தலைமையிலான இந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளே பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுதிட்டார். முதலமைச்சரின் இந்த 3 முக்கிய அறிவிப்புகள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், திமுக ஆட்சி அமைக்கும்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. அப்போது அந்த தகவல்கள் உண்மை இல்லை என மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே அவசர அவசரமாக அவர் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.

இதையும் படிங்க : பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சட்டமன்ற உறுப்பினரில் இருந்து அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்

இதேபோல கடந்த சில மாதங்களாக, விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக அவ்வப்போது மேடை பேச்சுகளில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பதற்காக அறிவாலயத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மண்டையை பொளக்கும் வெயில்..

துணை முதலமைச்சர் தேர்வு செய்வது முதலமைச்சரின் முடிவு – உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் இந்த தகவல்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். அப்போது உங்களது பதவி ஏற்பு விழாவுக்காக தொண்டர்கள் பட்டாசுக்களுடன் அறிவாலயத்தில் காத்திருப்பதாக தகவல் வெளியானது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், நான் இன்று அறிவாலயத்திற்கே செல்லவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்துவிட்டேன். தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்கவுண்டரில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார் என்ற தகவலால் அரசியல் களமே பரபரப்பாக காணப்படும் நிலையில், Deputy CM என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News