5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Puducherry: 8 ஆண்டுக்கு பின் ரேஷன் கடை திறப்பு.. புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி கிஃப்ட்!

புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் நடைபெற்ற அதிகாரத்தில் இருந்தவர்கள் இடையேயான மோதல் தான் காரணமாகும். புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கும், அப்போதைய துணை நிலை அலுவலராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Puducherry: 8 ஆண்டுக்கு பின் ரேஷன் கடை திறப்பு.. புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி கிஃப்ட்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Nov 2024 11:28 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொதுமக்களுக்கு சூப்பரான அறிவிப்பை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமாகவும்,யூனியன் பிரதேசமாகவும் விளங்கும் புதுச்சேரி மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் செயல்பட உள்ளது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தீபாவளி பரிசாக 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் தீபாவளிக்கான இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கிய பிறகு வழக்கம் போல மஞ்சை அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியில் மாதந்தோறும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் நவம்பர் மாதம் முதல் மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகையும் ரூபாய் 1000 உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என அந்த ஒருநாள் நம்மை ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இப்படியான நிலையில் புதுச்சேரி மக்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆண்டுகளுக்குப்பின்  ரேஷன் கடைகள்

புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் நடைபெற்ற அதிகாரத்தில் இருந்தவர்கள் இடையேயான மோதல் தான் காரணமாகும். புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கும், அப்போதைய துணை நிலை அலுவலராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

புதுச்சேரி மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கிரண்பேடி தெரிவித்து இருந்தார். அதன்படி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 1,200 மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.600 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் இதிலும் சில மாதங்கள் பணம் செலுத்தப்படாமல் தொய்வு ஏற்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

Also Read: DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இதனைத் தொடர்ந்து நேரடி பணம் வழங்கும் முறையை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும் இலவச அரிசியை தடுக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால்  இதில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தான் உள்ளது எனக் கூறி இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கிலும் இந்த தீர்ப்பு உறுதியானது. இதனால் புதுச்சேரியில் கடந்த ஏழு ஆண்டுகளாக இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. இதனிடையே சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆனாலும்  இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதனையடுத்து மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி மட்டும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களையும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

ரேஷன் கடைகள் மூடப்பட்டதன் தாக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. பிரச்சாரத்துக்கு சென்ற முதலமைச்சர் ரங்கசாமியிடம் பணத்துக்கு பதிலாக அரிசி வழங்குமாறு பெண்கள் வலியுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அப்போது அவர் மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் ரங்கசாமி இருந்த ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்தது.

Also Read: Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

இதன் பின்னர் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். செப்டம்பர் மாதம் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் உள்ளது.  இதனால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அளித்த பேட்டியில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு தீபாவளிக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என தெரிவித்தார்

Latest News