5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“வன்மத்தைக் கக்குறாங்க.. வதந்திகளைப் பரப்புகின்றனர்” முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது. ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

“வன்மத்தைக் கக்குறாங்க.. வதந்திகளைப் பரப்புகின்றனர்” முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் – பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 May 2024 13:00 PM

18வது மக்களவை தேத்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  ஆறு கட்டங்களாக 488  தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.  வரும் 1ஆம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில்  முதல் கட்டத்திலேயே தேர்தல் முடிந்த நிலையில், மற்ற மாநிலங்களில் நடக்கும்  தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டையும், திமுகவையும் பாஜகவினர் விமர்ச்சித்து வருகின்றனர்.  இந்த நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.

Also Read: மீண்டும் படுத்தி எடுக்க போகுது வெப்பம்.. 3 நாட்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

”வன்மத்தைக் கக்குகிறார்கள்”

வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது. ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: தேதி குறித்த விஜய்.. த.வெ.க நிர்வாகிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

Latest News