5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin: “கீரிம் பண்ணுக்கு எவ்வளவு வரி என கேட்க முடியல” திமுக பவள விழாவில் கலாய்த்த ஸ்டாலின்!

ஆளுங்கட்சியான திமுக 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1949ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, தனது பவள விழாவை சென்னையில் இன்று கொண்டாடியது. இந்த பவள விழாவுடன் கட்சி சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

CM Stalin: “கீரிம் பண்ணுக்கு எவ்வளவு வரி என கேட்க முடியல” திமுக பவள விழாவில் கலாய்த்த ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Sep 2024 20:38 PM

கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாது நிலை உள்ளது என்றும் கோட்டை இருந்தாலும் புல்லை வெட்ட மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஆளுங்கட்சியான திமுக 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1949ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, தனது பவள விழாவை சென்னையில் இன்று கொண்டாடியது. இந்த பவள விழாவுடன் கட்சி சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை நந்தனத்தில் இன்று மாலை திமுக பவள விழா நடந்தது. இந்த விழாவில் கருணாநிதி ஏஐ தொழில்நுட்பம் மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். மேலும், விருதுகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விருதாளருக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழாவில் துணை பொதுச் செயலாளர் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். மேலும், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், திமுக பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உடன்பிறப்புகளின் வேர்வையாலும், இரத்தத்தாலும், மூச்சுக் காற்றாலும், உழைப்பாலும்தான் இத்தனை ஆண்டு காலமாக தி.மு.கழகம் தலைநிமிர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. அடுத்த நூற்றாண்டு வரையிலும் திமுக ஆட்சியில் இருக்கும்.

Also Read: சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஏராளமான நெருக்கடிக்கு மத்தியில் எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு தமிழகத்தை வளமிக்க மாநிலமாக திமுக மேம்படுத்துயுள்ளது. கடந்த வந்த 75 ஆண்டுகளுக்கு எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்தோம். சமூகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பெரிய அளவில் முன்னேற்றம் காணச் செய்தோம்.

எத்தனையோ கிராமங்கள், கல்லூரிகள் என மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்திருக்கிறோம். ஆனாலும் எல்லா கனவுகளும் நிறைவேறவில்லை. மாநில உரிமைகள் வழங்கும் மத்திய அரசு அமையவில்லை. கோட்டை இருந்தாலும் புல்லை வெட்ட மாநில அரசுக்கு உரிமை இல்லை. மாநிலத்தின் கோரிக்கைகளுக்கு போராட வேண்டிய சூழல் உள்ளது. இன்றைக்கு கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாது நிலை உள்ளது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “எதிர்காலத்தில் வரும் தேர்தலிலும் நமக்கு தான் வெற்றி. இதை ஆணவத்தில் கூறவில்லை. உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் கூறுகிறேன். திமுகவுக்கு தித்திக்கும் கொள்கை இருக்கிறது. கொள்கையை காக்கும் படையாக தொண்டர்கள் உள்ளனர். தொண்டர்களின் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கும். நம்முடைய இலக்கு 2026ஆம் ஆண்டும் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல். இப்படி ஒரு வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை என்பதை வரலாறு சொல்ல வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: திராவிடத்தை கையில் எடுத்த விஜய்.. பெரியார் திடலில் த.வெ.க தலைவர்!

இன்று நடந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உட்பட 5 தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி, நிகழாண்டு பெரியார் விருதுககு பாபபம்மாள், அண்ணா விருதுக்கு அறந்தாங்கி மிசா ராமநாதன், கருணாநிதி விருதுக்கு ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருதுக்கு கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருதுக்கு வி.பி.ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், பவள விழா என்பதல் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெயரிலும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெற்றார். இது தவிர கட்சியில் பணியாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Latest News