5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin: திமுக கூட்டணியில் பிளவா? பவள விழா பொதுக் கூட்டத்தில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!

DMK Pavala Vizha Kanchipuram: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர். இன்று மாலை காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் திமுக பவளவிழா பொதுக் கூட்டம் நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த பொதுக் கூட்டம் நடந்தது.

CM Stalin: திமுக கூட்டணியில் பிளவா? பவள விழா பொதுக் கூட்டத்தில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் (picture credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 28 Sep 2024 23:01 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர். இன்று மாலை காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் திமுக பவளவிழா பொதுக் கூட்டம் நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பவள விழா பொதுக் கூட்டத்தில் தி.க தலைவர் வீரமணி, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலக்கிருஷ்ணன், கம்யூனிஸ்ட் செயலாளர் ரா. முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த பவள விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணா உருவாக்கிய திமுக இயக்கத்தின் பவள விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவின் பவள விழாவை நாம் நடத்துவது நமக்கு கிடைத்த பெருமை. வான் மழை வாழ்த்ததில் உருவான திமுக தற்போது வையகம் பாராட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

அண்ணாவின் பாதையில் இம்மிளவும் விலகாமல் திராவிட மாடல் அரசை நடத்துகிறோம். திமுவிற்கு கிடைத்துள்ள புகழ் மாலையில் அனைவருக்கும் பங்கு உள்ளது. திராவிடம் என்று சொன்னாலே சிலர் எரிச்சல் அடைகின்றனர். திராவிட நாகரிகம் தான் சிறந்த நாகரிகம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராவிட நாடு என்று சொன்னது சண்டைக்கு வந்தவர்கள் கூட இன்று நம்முடன் உள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை கொண்ட நாட்டில் நாம் தான் வரியை செலுத்துகிறோம்.

”திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது”

நாம் செலுத்தும் வரியை தான் கேட்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை கூட சென்று நிதியை பெறுவோம். திமுகவின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. கொள்கை கூட்டணி. தமிழகத்தில் நாம் அமைந்த கூட்டணியை பார்த்து தான் இந்தியா கூட்டணி கூட உருவானது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று நினைக்கின்றனர்.

Also Read: பூமி பூஜை நடத்தும் விஜய்.. மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் பிளவை எப்போதும் எவராலும் ஏற்படுத்த முடியாது. பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. சில கட்சிகள் தேர்தலுக்காக , உருவாகும் அதன் பிறகு கலைந்து விடும். நாம் அப்படி அல்ல. நமக்குள் மோதல் வராத , குழப்பம் ஏற்படாதா என தாற்காலிக சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கனவு பலிக்காது .

அதிகாரம் நிறைந்ததாக மாநிலங்களை மாற்ற வேண்டும். அதனால்தான் மாநில சுய ஆட்சி வேண்டுமென இறுதி மூச்சாக பாடுபட்டார் கலைஞர். கோட்டையில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவதற்கு உரிமையை பெற்று தந்தவவர் கலைஞர் தான் . மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்றும் வேலையை பார்த்து வருகிறார்கள்.

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லாதது”

நம்முடைய மாநில சுயாட்சி தத்துவத்தை பிற மாநிலங்கள் பேசுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல், அப்படிதான் முதல் தேர்தல் நடந்தது என கூறுகிறார்கள் ‌. அப்போது இருந்த மக்கள் தொகை என்ன அப்போது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற எண்ணிக்கை என்ன?

அன்றைய தேர்தலும் இன்றைய தேர்தலும் ஒன்னா? நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்த முடிந்ததா ? நடந்து முடிந்த தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இவர்கள் ஒரே நேரத்தில் , சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவார்களா? கூரை ஏரி கோழி பிடிக்க தெரியாதவன் , வானம் ஏரி வைகுண்டம் போன கதையாக தான் உள்ளது.

Also Read: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. 3 சீனியர்கள் நீக்கமா? வரலாறே மாறப்போகுது!

காஷ்மீரில் கூட ஒரு நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லாதது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்து மாநில அதிகாரத்தை குறைக்கவே பாஜக முயற்சி செய்கிறது

 

Latest News