5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin On Neet: முதுநிலை நீட் தேர்வு ரத்து… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட், நெட் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CM Stalin On Neet: முதுநிலை நீட் தேர்வு ரத்து… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
முதல்வர் ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jun 2024 10:36 AM

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட், நெட் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “யுஜிசி நெட் தேர்வு ரத்தை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


மாணவர்கள், பெற்றோர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்கல்வி தேர்வுமுறைகளில் மாநில உரிமைகளை மீண்டும் பெற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read: சிக்கலில் 157 பல்கலைக்கழகங்கள்.. யு.ஜி.சி வெளியிட்ட பட்டியல்.. விவரம்

முதுநிலை நீட் தேர்வு ரத்து:

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட், நெட் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு நடைமுறையில் நேர்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: நீட் வினாத்தாள் கசிவு.. கடும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.. என்ன தண்டனை தெரியுமா?

Latest News