50 ஆண்டுகளுக்கு முன் திருடிய ரூ.37.. 3 லட்சமாக திருப்பி கொடுத்த கோவை தொழிலதிபர்!
Coimbatore : இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி என்பவரிடம் இருந்து திருடிய 37 ரூபாயை, தற்போது ரூ.3 லட்சமாக திருப்பி கொடுத்துள்ளார் கோவைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் 1970ஆம் ஆண்டுகளில் ரூ.37 திருடிய நிலையில், தற்போது அவர்களுக்கு ரூ.3 லட்சமாக திருப்பி கொடுத்துள்ளார்.
இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி என்பவரிடம் இருந்து திருடிய 37 ரூபாயை, தற்போது ரூ.3 லட்சமாக திருப்பி கொடுத்துள்ளார் கோவைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் 1970ஆம் ஆண்டுகளில் ரூ.37 திருடிய நிலையில், தற்போது அவர்களுக்கு ரூ.3 லட்சமாக திருப்பி கொடுத்துள்ளார். நவீன காலத்தில் திருட்டு சம்பவம் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் தொடர்நது அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடிய பணத்தை வட்டியும், முதலுமாய் கோவையைச் சேர்ந்த தொழிலபதிர் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன் திருடிய ரூ.37
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி எழுவாய். இந்த தம்பதிக்கு 1970ஆம் ஆண்டில் வீட்டில் காலி செய்தனர். வீட்டை காலி செய்தபோது உதவிக்காக பக்கத்து வீட்டில் இருந்த 10 வயது சிறுவன் ரஞ்சித்தை அழைத்திருக்கின்றனர்.
அப்போது சிறுவன் ரஞ்சத் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வைக்கும்போது தலையணைக்கு அடியில் ரூ.37 இருந்துள்ளது. இதனை பார்த்த ரஞ்சித் அதனை எழுவாய்-சுப்பிரமணி தம்பதிக்கு தெரியாமல் திருடியுள்ளார். பின்பு, ரஞ்சித் 1977ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த அவர், கோவையில் தொழில் செய்து வருகிறார்.
தற்போது ரஞ்சித் கோவையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் எழுவாய்-சுப்பிரமணி வீட்டில் திருடிய ரூ.37 திருப்பி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக அவர்களை தீவிரமாக தேடி விசாரித்துள்ளார். அப்போது, எழுவாய்-சுப்பிரமணி தம்பதி இறந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
Also Read : வெளுக்கும் கனமழை.. கொடைக்கானல், குன்னூர் போகாதீங்க.. வெதர்மேன் முக்கிய தகவல்!
ரூ.3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்
அதே நேரத்தில் எழுவாய்-சுப்பிரமணி தம்பதிக்கு 3 மகன்கள், ஒரு மகன் இருப்பது ரஞ்சித்திற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சந்தித்து பணத்தை கொடுத்த முடிவு ரஞ்சித், இலங்கை சென்று 3 மகன்களின் குடும்பத்திற்கு ரூ.70,000 வழங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும், எழுவாய்-சுப்பிரமணி தம்பதியின் ஒரு மகள் திருச்சியில் இருப்பதை தெரிந்ததை அடுத்து, அவரையும் சந்தித்து ரூ.70,000 வழங்கியுள்ளார். எனவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடிய 37 ரூபாயை ரஞ்சித் தற்போது ரூ.3 லட்சமாக கொடுத்துள்ளார். இதற்கிடையில், கோவையில் உள்ள ரஞ்சித்தை எழுவாய்-சுப்பிரமணி பேத்தி பவானி சந்தித்து நன்றி கூறியுள்ளார்.
Also Read : கனமழை எதிரொலி.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
இதுகுறித்து தொழிலதிபர் ரஞ்சித் கூறுகையில், “அவர்கள் காசு வாங்குவதை விட இத்தனை வருஷங்கள் கிழத்து எங்களை சந்தித்ததற்கு மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
இன்று அவர்கள் என்னை சந்திக்க கோவைக்கு வந்திருக்கிறார்கள். இதுயெல்லாம் எதிர்பார்க்காத தருணமாக உள்ளது. வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியாது. எனக்கு கடன் என்று யாரிமும் இருக்க கூடாது. இதனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பணத்தை திருப்பி கொடுத்தேன்” என்றார்.