Coimbatore Election Results 2024 : கணபதி ராஜ்குமார் வெற்றி.. கோவை மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

கோவை தொகுதி தேர்தல் முடிவுகள் : கோவை மக்களவைத் தொகுதியில் திமுகவின் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். இவர் 4 லட்சத்து 42 ஆயிரத்து 016 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றுள்ளார்.  அடுத்தாக பாஜகவின் அண்ணாமலை 3 லட்சத்து 52 ஆயிரத்து 890 வாக்குகள் பெற்ற தோல்வி அடைந்தார். சுமார் 89,126 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கணபதி ராஜ்குமார் பெற்றி வாகை சூடியுள்ளார்.  மேலும், அதிமுகவின்  சிங்கை ராமச்சந்திரன்  1,81,452 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

Coimbatore Election Results 2024 : கணபதி ராஜ்குமார் வெற்றி.. கோவை மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

கோவை மக்களவைத் தேர்தல் முடிவுகள்

Updated On: 

04 Jun 2024 19:48 PM

கோவையில் திமுக வெற்றி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக களம் கண்டது. 1980, 1996ஆம் ஆண்டுகளில் திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றது. அதன்பின், 2014ஆம் ஆண்டில் நேரடியாக போட்டியிட்ட திமுக மூன்றாவது இடத்தையே பிடித்தது. எனவே, 2024 மக்களவை தேர்தலில் திமுக நேரடியாக களமிறங்கும் நிலையில்,  கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். இவர் 4 லட்சத்து 42 ஆயிரத்து 016 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றுள்ளார்.  அடுத்தாக பாஜகவின் அண்ணாமலை 3 லட்சத்து 52 ஆயிரத்து 890 வாக்குகள் பெற்ற தோல்வி அடைந்தார். சுமார் 89,126 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கணபதி ராஜ்குமார் பெற்றி வாகை சூடியுள்ளார்.  மேலும், அதிமுகவின்  சிங்கை ராமச்சந்திரன்  1,81,452 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்  கலைமணி ஜெகநாதன் 65,936 வாக்குகள் கிடைத்தது.

முந்தைய தேர்தல் முடிவுகள்:

கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் (ஜார்கண்ட் ஆளுநர்) பிடித்தார். ஏறக்குறைய 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பி.ஆர்.நடராஜன். இதனை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் கல்யாண் சுந்தரம் 60,519 வாக்குகள் பெற்றார். 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுகவின் பி.நாகராஜன் 4 லட்சத்து 31 ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். திமுகவின் கணேஷ்குமார் 2.17 லட்ச வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

கோவை தொகுதி: 

மேற்குத் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக கோவை மக்களவைத் தொகுதி கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை விட அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட கோவை தொகுதியில் அதிக தொழிற்சாலைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவின் மேன்செஸ்டர் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாக உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் பி ஆர் நடராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இந்தத் தொகுதி இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை தொகுதியை பொருத்தவரையில் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதற்கு இணையாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதோடு, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றனர். கடந்த 1990களில் நிகழ்ந்த சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் காரணமாக கோவை தொகுதி பதற்றமான தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது‌.

வாக்காளர்களின் எண்ணிக்கை:

கோவை  மக்களவை தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 83 ஆயிரத்து 063 வாக்காளர்கள் உள்ளனர்.

  1. பெண் வாக்காளர்கள் – 10,52,602
  2. ஆண் வாக்காளர்கள் – 10,30,063
  3. மூன்றாம் பாலினத்தவர் – 369

சட்டமன்ற தொகுதிகள்:

கோவை நாடாளுமன்ற தொகுதி கோவை தெற்கு, வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது. 1951ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தலை கோவை எதிர்கொண்டபோது, காங்கிரஸ் சார்பில் ராமலிங்க செட்டியார் போட்டியிட்டார். ஆனால், இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், தமிழக வரலாற்றில் போட்டியின்றி எம்பியான முதல் வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார். கோவை தொகுதியில் இதுவரை 7 முறை கம்யூனிஸ்ட் கட்சிகள், 6 முறை காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை பாஜக, ஒரே ஒரு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

 

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!