வேகமாக வந்த வந்தே பாரத் ரயில்.. செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பறிபோன உயிர்.. கோவையில் அதிர்ச்சி!

கோவையில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த தொழிலாளி வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமூக ஊடகங்களின் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமூக வலைதளங்களில் லைக் பெறுவதற்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்களை செய்து வருகின்றனர். வெறும் லைக் மற்றும ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

வேகமாக வந்த வந்தே பாரத் ரயில்..  செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு பறிபோன உயிர்.. கோவையில் அதிர்ச்சி!

வந்தே பாரத்

Updated On: 

11 Nov 2024 11:01 AM

செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட தொழிலாளி: கோவையில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த தொழிலாளி வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமூக ஊடகங்களின் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமூக வலைதளங்களில் லைக் பெறுவதற்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்களை செய்து வருகின்றனர். வெறும் லைக் மற்றும ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இந்த நிலையில், நம் தமிழ்நாட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது,  கோவையில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த தொழிலாளி வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இவர் சிவதாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் சிவதாஸ் (51). இவர் ஒரு மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதற்காக அவர் தினமும் ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு சிவதாஸ் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அடுத்த நொடியே பறிபோன உயிர்

அப்போது, அங்குள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ரயில் முன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்தார்.எஇதில் உள்ள ஆபத்தைப் பொருட்படுத்தாமல், அவர் ஆபத்தான முறையில் தண்டவாளத்திற்கு அருகில் நின்று, ரயில் முன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை பார்த்த ரயில் ஓட்டுநர் ஹாரன் அழுத்தியுள்ளார்.

அப்போது, அவர் கண்டுக்காமல் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுள்ளார். இதனால், சிவதாஸ் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரயில்வே கேட்டைக் கடக்கக் காத்திருந்தபோது, ​​சிவதாஸ் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் ரயிலைக் கண்டார். அப்போது தண்டவாளத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லோகோ பைலட் ஹார்ன் அடித்தும், சிவதாஸ் நகரவில்லை. இதனால், அந்த நபர் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார். அவர் உடனடியாக உயிரிழந்தார்” என்று கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (சிஎம்சிஎச்) அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!