5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: 4 வருடத்தில் 1500 சவரன் கொள்ளை.. திருடிய நகையில் ரூ.4கோடிக்கு பிஸினஸ்.. அலறவைத்த ‘ராடுமேன்’ திருடன்!

கோவை ராட்மேன் சிங்காநல்லூர் பீளமேடு, ராமநாதபுரம், துடியாலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதாவது ரயில்வே ட்ராக்கை ஒட்டி வரும் பகுதிகளில் கொள்ளையடித்துள்ளனர். கட்டிப் போடும் இடங்களில் வெவ்வேறு மொழிகள் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் கொள்ளையடிக்கும் போது பயன்படுத்துவார்கள். அம்சராஜ் (26) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime: 4 வருடத்தில் 1500 சவரன் கொள்ளை.. திருடிய நகையில் ரூ.4கோடிக்கு பிஸினஸ்.. அலறவைத்த ‘ராடுமேன்’ திருடன்!
கோவையில் கைது செய்யப்பட்ட ராட்மேன்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 11 Jul 2024 12:49 PM

கோவை கொள்ளை சம்பவம்: கோவையில் கடந்த இரண்டு வருடங்களாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தவிரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராடுமேன் (எ) மூர்த்தியை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின், “ இவர் கோவை மாநகரத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 68-கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதில் மூர்த்தி மற்றொரு நபரான அம்சராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கநகைகள் மற்றும் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மூர்த்தி தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் எனவும் கடந்த 2020-ல் முதல் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்ல. முதல்முறையாக இப்போது கோவை தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவத்திற்கு இரும்பு ராடு மற்றும் ஒரே மாதிரியான சட்டை பயன்படுத்துவதால் ராடுமேன் எனப்படுகிறார். ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து வாகனங்கள் குறைவான உள்ள வீடுகள் மற்றும் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளைடித்துள்ளார்.

Also Read:  டபுள் ஹேப்பி.. மருமகளும் திருநெல்வேலி தான்..நன்றி மறக்காத நெப்போலியன்!

ஒட்டன்சத்திரம் மற்றும் ராஜபாளையத்தில் தலா 50 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்குகளில் தொடர்புடையவர் எனவும், தனியாக சென்றும் கூட்டாக சென்றும் கொள்ளை அடித்துள்ளார். ஏழு நபர்கள் இவரது கூட்டத்தில் உள்ளனர். மூளையாக செயல்பட்டவர் மூர்த்தி. ஆட்கள் இருந்தால் நபர்களை கட்டிபோட்டும் கொள்ளை அடிப்பார்கள் .63 சவரன் நகைகள் பறிமுதல் செய்துள்ளோம். ரூ.4.5 கோடி மதிப்பில் ராஜலட்சுமி ஸ்பின்னிங் மில் ஒன்றை கொள்ளையடித்த பணத்தில் வாங்கி நடத்தி வருகிறார். மனைவி மற்றும் கூட்டாளியையும் ராஜபாளையம் போலீசார் கைதுசெய்து விசாரத்து வருகின்றனர்.

சிங்காநல்லூர் பீளமேடு, ராமநாதபுரம், துடியாலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதாவது ரயில்வே ட்ராக்கை ஒட்டி வரும் பகுதிகளில் கொள்ளையடித்துள்ளனர். கட்டிப் போடும் இடங்களில் வெவ்வேறு மொழிகள் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் கொள்ளையடிக்கும் போது பயன்படுத்துவார்கள். அம்சராஜ் (26) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு மொழி பற்றி அதிக அறிவு இல்லை. சிறிய சிறிய வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டு அடையாளத்தை மறைத்துள்ளனர். தனித்தனியாக சென்று ஒரு இடத்தில் கூடி குற்ற சம்பவங்களில் திட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இரும்பு கம்பி சத்தம் வராது என்பதால் இரும்பு கம்பியை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். இவரது சட்டைக்குள் ஒரு பை இருக்கும் அதில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை வைத்துக் கொள்வார். மாஸ்க் போட்டுள்ளதை வைத்து வரைந்த ஓவியம் இந்த வழக்குக்கு உதவியாக இருந்த்து. மனைவி மற்றும் சுரேஷ் என்பவரை ராஜபாளையம் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இன்னும் நான்கு பேரை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இரண்டு கார்கள் ,கவாசி பைக் உள்பட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தோராயமாக 1500 சவரன் கொள்ளையடித்துள்ளனர். அதில் கோவை மாநகரில் மட்டும் 376 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 1.76 கோடி ரூபாய் வைர கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது விருது நகரில் 20 வழக்குகளும், மதுரை 14 வழக்குகளும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் 16 வழக்குள் பதவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சென்னையில் மின்தடை.. ஏரியா வைஸ் லிட்ஸ் இதோ..

Latest News