5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கோவையை அலறவிட்ட சம்பவம்.. நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து கொள்ளை முயற்சி.. நடந்தது என்ன?

ஹவாலா பணத்துடன் வருவதாக நினைத்து தொழிலதிபரின் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர் உட்பட 4 பேர் வீடியோ பதிவு வெளியானதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹவாலா பணத்துடன் வருவதாக நினைத்து தொழிலதிபரின் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சின் ஏர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). கோவை வழியாக கேரளா செல்வதற்காக மதுக்கரை நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே வந்தபோது, அந்த கும்பல் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, காரை அஸ்லாம் சித்திக் வேகமாக ஓட்டி அருகே இருந்த சுங்கச்சாடிவக்கு சென்றார். சித்திக்கை துரத்தி வந்த கும்பல், சுங்கச்சாவடியில் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோடினர்.

கோவையை அலறவிட்ட சம்பவம்.. நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து கொள்ளை முயற்சி.. நடந்தது என்ன?
கோவை கொள்ளை சம்பவம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 17 Jun 2024 11:38 AM

கோவையை அலறவிட்ட சம்பவம்: ஹவாலா பணத்துடன் வருவதாக நினைத்து தொழிலதிபரின் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சின் ஏர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர் கடந்த 12ஆம் தித இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்று கம்ப்யூட்டர் வாங்கி கொண்டு சார்லஸ் உள்ளிட்ட நான்கு நன்பர்களுடன் காரில் 13ஆம் தேதி மாலை கேரளாவிற்கு கிளம்பினார். அப்போது, அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்திருப்பதாக நினைத்து கேரளாவைச் சேர்ந்த ஒரு கும்பல் பெங்களூருவில் இருந்து 3 காரில் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

கோவை வழியாக கேரளா செல்வதற்காக மதுக்கரை நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே வந்தபோது, அந்த கும்பல் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, காரை அஸ்லாம் சித்திக் வேகமாக ஓட்டி அருகே இருந்த சுங்கச்சாடிவக்கு சென்றார். சித்திக்கை துரத்தி வந்த கும்பல், சுங்கச்சாவடியில் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோடினர். இதனை அடுத்து, அஸ்லாம் சித்திக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை தேடினர்.

Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க!

4 பேர் கைது:

இந்த கொள்ளை கும்பல் அருகில் இருந்த சோதனை சாவடியில் சிக்கியது. இவர்கள் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ் பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய நான்கு பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருக்கும் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில், விஷ்ணு என்பர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக பாலக்காடு வந்துள்ளார்.  கேரளாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பல் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருவுக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்கிற தகவல் இந்த குழுவினருக்கு கிடைத்துள்ளது. அந்த குழுவினர் அஸ்லாமை பின் தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்குமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்த இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: “அதிமுக முடிந்துவிடவில்லை… என்னுடைய என்ட்ரி தொடங்கிவிட்டது” சசிகலா பரபர பேட்டி!

Latest News