கல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமையா? போலீசார் விசாரணையில் வெளியான தகவல்!
College Student | தேனி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மாணவியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரி மாணவியை கடத்திய அடையாளம் தெரியாத கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றதாக தகவல் வெளியான நிலையில் அது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மாணவியின் இந்த பாலியன் வன்கொடுமை புகார் உண்மை இல்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. உண்மையின் நடந்தது என்ன என விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்?
தேனி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மாணவியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பிறகு மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க : Lebanon Attack: சர்வ நாசம்.. 182 பேர் மரணம்.. லெபனானை நிலைகுலைய வைத்த இஸ்ரேல்!
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி
இந்த நிலையில் ரயில்வே அதிகாரிகளிடம் மாணவி தனக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக அளித்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு காவல்துறையினர் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!
பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை தேடி வந்த போலீஸ்!
மாணவி கூறிய தகவலின்படி, மாணவியை வன்கொடுமை செய்ய கும்பலையும் கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய காரையும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் இந்தன் விவகாரத்தில் காவல்துறை முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த மாணவி பாலியன் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க : IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை – காவல்துறை
இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறை, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. மன அழுத்தம் காரணமாக அந்த மாணவி இவ்வாறு புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
இதையும் படிங்க : Bengaluru Murder: ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்.. அதிர்ந்த போலீஸ்.. விசாரணையில் ஷாக்!
கல்லூரி மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்திருந்த நிலையில், விசாரணையில் மாணவி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.