”எனக்கு சூப்பர் பவர் இருக்கு” 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | college student jumps from fourth floor of hostel in coimbatore | TV9 Tamil

”எனக்கு சூப்பர் பவர் இருக்கு” 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

சூப்பர் பவர் இருப்பதாகக் கூறி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து நேற்று முன்தினம் மாணவர் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது மாடியில் இருந்து மாணவர் குதித்ததில் அவர் படுகாயம் அடைந்ததார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் வெளியானது.

”எனக்கு சூப்பர் பவர் இருக்கு 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

4வது மாடியில் இருந்து குதித்த மாணவர்

Updated On: 

30 Oct 2024 08:46 AM

சூப்பர் பவர் இருப்பதாகக் கூறி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து நேற்று முன்தினம் மாணவர் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது மாடியில் இருந்து மாணவர் குதித்ததில் அவர் படுகாயம் அடைந்ததார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (19). இவர் கோவை மாவட்டம் மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள தனியர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அரசுப் பள்ளியில் படித்து தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.

4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன்

இவர் அதே கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த சூழலில் மாணவன் பிரபு கல்லூரி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

பிரபு கடந்த சில நாட்களாகவே தனக்கு சூப்பர் பவர் இருப்பதாகவும், தனது சக்தியைக் கொண்டு அசாத்திய விஷயங்களை செய்ய முடியும் என்றும் தனது நண்பர்கள் மற்றும் விடுதி அறையில் தங்கி இருந்த மாணவர்களிடம் கூறி வந்திருக்கிறார்.

மேலும் சாகச வீடியோக்கள், சூப்பர் ஹீரோ தொடர்பான வீடியோக்களையும் அவர் தனது செல்போனில் பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதோடு இல்லாமல், கடந்த சில நாட்களாக தனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளதாகவும், இதனால் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி வந்திருக்கிறார்.

Also Read : தீபாவளி விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலு, தனக்கு சக்தி குறையவில்லை என்றும் சூப்பர் ஹீரோக்களுக்கு உள்ள பவர் தன்னிடம் இருப்பதாக சக நண்பர்களிடம் கூறி வந்திருப்பதாக தெரிகிறது.

சூப்பர் பவர் இருப்பதாக கூறி விபரீத செயல்:

இந்த நிலையில், மாணவர் பிரவு கல்லூரி விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை விடுதியில் இருந்து சுற்றியவாறு கீழே குத்தித்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பபட்டுள்ளது.

4வது மாடியில் இருந்து குதித்தில் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், தலையிலும் காயம் ஏற்பட்டது.  இதனை பார்த்த சக மாணவர்கள் பிரபுவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான மெத்தப்பட்டமைன் பறிமுதல்.. சினிமா பாணியில் தட்டித்தூக்கிய போலீஸ்..

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பலத்த காயம் அடைந்த அவர், உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவனின் செல்போனை ஆய்வு செய்வதோடு, பெற்றோர்கள், அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சூப்பர் பவர் இருப்பதாக கூறி, கல்லூரி மாணவர் நான்காவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?
ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்புகள் இவைதான்!
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!