EVKS Elangovan : காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!

Miot Hospital | காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நல குறைவு ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

EVKS Elangovan : காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!

ஈவிகேஎஸ் இளங்கோவன்

Updated On: 

14 Dec 2024 11:06 AM

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த ஒரு மாத காலமாகவே செயற்கை சுவாச உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 13 ஆம் தேதி இரவு முதல் அவரது இதயதுடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : Rain Update: உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. காத்திருக்கும் கனமழை!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர்  ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினாராக பணியாற்றினார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் இருந்து த.மா.கா வேட்பாளர் யுவராஜ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திருமகன் ஈவெரா சுமார் 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதாவது தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி த.மா.கா வேட்பாளர் யுவராஜை விட சுமார் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் இறந்துவிட, தொகுதி காலியானது. இந்த நிலையில், அந்த தொகுதியில் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையும் படிங்க : Australia : ரூ.54 லட்சம் போனஸ்.. ஊழியர்களை ஆனந்த கண்ணீரில் மிதக்க விட்ட நிறுவனம்!

மகனின்  தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்ட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவருக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மிகுந்த ஆதரவு அளித்த நிலையில், அதிக வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மொத்தமாக சுமார் 1,10,156 வாக்குகள் பெற்ற நிலையில், 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க : Elon Musk : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ்

அவர் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த நிலையில், திடீர் உடநல குறைவு ஏற்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டிசம்பர் 13 ஆம் தேதி முதல் உடல்நிலை மீண்டும் மோசம் அடைய தொடங்கிய நிலையில், அவர் டிசம்பர் 14 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரின் மறைவால் கட்சி வட்டாரங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றன. தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்
தினமும் பிஸ்தா சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?