5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Maha Vishnu: “சித்தர் சொல்லிதான் பேசினேன்” அடித்துவிடும் மகா விஷ்ணு.. பரபர வாக்குமூலம்!

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ஆன்மிக சொற் பொழிவாளர் மகா விஷ்ணு நேற்று கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய வந்தபோது சென்னை விமான நிலையத்தில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர்.

Maha Vishnu: “சித்தர் சொல்லிதான் பேசினேன்” அடித்துவிடும் மகா விஷ்ணு.. பரபர வாக்குமூலம்!
மகா விஷ்ணு (Picture Courtesy: Twitter)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Sep 2024 15:25 PM

மகா விஷ்ணு பரபர வாக்குமூலம்: சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ஆன்மிக சொற் பொழிவாளர் மகா விஷ்ணு நேற்று கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய வந்தபோது சென்னை விமான நிலையத்தில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது.  மகா விஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் கூறுகையில், ”நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன். இதுபோன்று பல இடங்களில் பேசி இருக்கிறேன். சித்தர்கள் சொன்னதால் தான் பேசினேன். அவர்கள் தான் என்னை வழிநடத்துவார்கள்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Also Read: வங்கக் கடலில் சம்பவம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

மகா விஷ்ணு  விமான நிலையத்தில் கைது:

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான மகா விஷ்ணு கடந்த 28ஆம் தேதி  சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர், உடல் குறைபாடுகளுக்கு காரணம் அவர்கள் முன்பிறவியில் செய்த பாவம் என்றும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.  பள்ளியில் மகா விஷ்ணுவின் பேச்சை கண்டித்த மாற்றுத்திறனாளி  ஆசிரியர் சங்கரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும் இணையத்தில் பரவியது.

இதையடுத்து, மகா விஷ்ணு  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சங்கம் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், மகா விஷ்ணுவின் இந்த பேச்சை மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.. விக்கிரவாண்டி மாநாடு குறித்து நடிகர் விஜய் தகவல்!

இதனை அடுத்து, மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய வந்தபோது சென்னை விமான நிலையத்தில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.   நேற்று நண்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில்  அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Latest News