Crime: பச்சிளம் குழந்தைக்கு விஷப்பால் ஊற்றி கொன்ற தம்பதி.. பிறந்த 9 நாட்களில் கொடூரம்.. அதிர்ச்சி காரணம்!

இரண்டாவது பெண் குழந்தை என்பதால் பிறந்த 9 நாட்களே ஆன குழந்தையை விஷப்பால் ஊற்றி தம்பதி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை தாயும், தந்தையும்  பிச்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர்.  இதனால் குழந்தையின் வாய், மூக்கில் ரத்து கொட்டி துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். 

Crime: பச்சிளம் குழந்தைக்கு விஷப்பால் ஊற்றி கொன்ற தம்பதி.. பிறந்த 9 நாட்களில் கொடூரம்.. அதிர்ச்சி காரணம்!

மாதிரிப்படம்

Updated On: 

05 Sep 2024 15:03 PM

பச்சிளம் குழந்தை கொலை: இரண்டாவது பெண் குழந்தை என்பதால் பிறந்த 9 நாட்களே ஆன குழந்தையை விஷப்பால் ஊற்றி தம்பதி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (30). இவருக்கும் ஓடுகத்தூர் அடுத்த பகுதியைச் சேர்ந்த டயானா (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி டயானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, டயானாவிற்கு ரத்த அளவு குறைந்து இருந்ததால் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், 9 நாட்கள் கழித்து நேற்று தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரது கணவருடன் வந்தனர்.

ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இவர்களுக்கு 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், திடீரென குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக பெண் டயானா தனது தந்தையிடம் கூறியிருக்கிறார். இதனால் அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது. அப்போது, குழந்தை எப்படி இறந்தது என்று டயானாவின் தந்தை சரவணன் கேட்டுள்ளார்.

Also Read: ”விவாகரத்து பெறும் வரை ஜீவனாம்சம் தந்து தான் ஆகணும்” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அதற்கு, ஜீவா குழந்தை ஸ்ரீதேஜா (முதல் குழந்தை) போர்வையை எடுத்து குழந்தை முகத்தில் போட்டதால் குழந்தை இறந்தது என்று கூறியிருக்கின்றனர். இதற்கிடையில், ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா அவசரமாக வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் பள்ளம் தோண்டி குழந்தை சடலத்தை புதைத்து உள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த சரவணன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

2வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்:

அப்போது, ஜீவா மற்றும் டயானா இருவரும் பேசி வைத்தது போல் ஒரே பதில் கூறியிருக்கின்றனர். இதனால், அவர்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். அன்றைய தினம் மாலை இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதனை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக போலீசார் விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை தாயும், தந்தையும் பிச்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர்.

Also Read: தமிழ்நாட்டில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை… உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!

இதனால் குழந்தையின் வாய், மூக்கில் ரத்து கொட்டி துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை கொலை செய்துவிட்டு ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா தலைமறைவாகி உள்ளனர். இதனால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!