Crime: இன்ஸ்டாகிராம் காதலனுக்கு ஐபோன்.. தாயின் நகையை அடகு வைத்த சிறுமி!
இன்ஸ்டாகிராமில் காதலித்த 15 வயது சிறுமி தாயின் நகைகளை எடுத்து சென்று விற்று காதலனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமியும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி வந்தனர். இந்த உறவு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், 17 வயது சிறுவன் தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளதால் ஐபோன் வாங்கி தர வேண்டும் என சிறுமியிடம் கேட்டிருக்கிறார். இதனால், சிறுமி தாயின் நகையை அடகு வைத்து காதலுக்கு ஐபோனை பரிசாக கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் காதலனுக்கு ஐபோன்: சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பிறகு காதல் என்ற விஷயத்தில் பல விபரீத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. குறிப்பாக 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தவறான வழியில் செல்கின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் வெறும் லைக் மற்றும ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து விடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராமில் காதலித்த 15 வயது சிறுமி தாயின் நகைகளை எடுத்து சென்று விற்று காதலனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமியும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி வந்தனர். இந்த உறவு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், 17 வயது சிறுவன் தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளதால் ஐபோன் வாங்கி தர வேண்டும் என சிறுமியிடம் கேட்டிருக்கிறார்.
Also Read: பக்ரீத் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம் தெரியுமா?
தாயின் நகையை அடகு வைத்த சிறுமி:
இதனால், சிறுமி தனது தாயின் 7 சவரன் நகையை எடுத்து வீட்டை வீட்டு வெளியேறியிருக்கிறார். பின்னர், அந்த நகையை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் காதலனுக்கு ஐபோனை பரிசாக கொடுத்திருக்கிறார் சிறுமி. பின்னர், இருவரும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தனர். இந்த நிலையில், வீட்டில் நகை மற்றும் மகள் காணாமல் போனதால், அவரது பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் அந்த சிறுமியை தேடினர். திருப்பூர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததை அடுத்து, அவரது மொபைல் ஜிபிஎஸ் மூலம் இருவரையும் கோவை அருகே கண்டுபிடித்து எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!